Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 3 வருடங்களில் 130 பேர் காணாமல் போயிருப்பதாக, காணாமல் போனவர்களின் உறவினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்திருந்தனர்.

மட்டக்களப்பு அமெரிக்க மிசன் மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான அரியனேத்திரன், செல்வராசா, யோகேஸ்வரன் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

காணாமல் போனவர்களில் அதிகமானோர் 20 முதல் 35 அகவைக்க உட்பட இளையோர் எனச் சுட்டிக்காட்டிய உறவினர்கள், அவர்களை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.

கருணா, பிள்ளையான் ஆகியோர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்த பின்னர் பல நூற்றுக்கான இளையோர் கடத்திச் செல்லப்பட்டு, கட்டாய ஆயுத பயிற்சி வழங்கப்பட்டுள்ளதையும் மக்கள் சுட்டிக்காட்டினர்.

இதற்குப் பதிலளித்த கூட்டமைப்பினர், சிறீலங்கா அரசுத் தலைவருடன் இணைந்து இவர்களை மீட்க குழுவொன்று அமைக்க இருப்பதாகத் தெரிவித்த போதிலும், அதனை ஏற்க மக்கள் மறுத்துள்ளனர்.

மாறாக வெளிநாடுகள் சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்து காணாமல் போன உறவுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது பற்றி பதிவிற்கு கருத்துரைத்த காணாமல் போன ஒருவரது உறவினர், சிறீலங்கா அரசு, அதன் புலனாய்வுக்குழு, துணைப்படைக் குழுக்களாலேயே எமது உறவுகள் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களிடமே சென்று உறவுகளை மீட்டுத் தருமாறு கேட்பதாகக் கூறுவது கேலிக்கூத்தாகும்.

எமது வாக்குகள் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதவரை ஆக்கபூர்வ நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை. காணாமல் போனோர் விடயத்தில் அவர்கள் கூட்டங்களை மட்டம் வைத்திவிட்டுச் செல்லாது ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

0 Responses to மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுதிமொழியை ஏற்காத மக்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com