தமிழகம் கோயம்பத்தூரில் இடம்பெறும் செம்மொழி மாநாட்டில், விசேட அதிதியாக கலந்துகொள்ளச் சென்றுள்ள பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி, மாநாட்டு நிகழ்வுகளில், தாம் கலந்து கொள்வது குறித்து சில அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாக வெளிவந்த தகவல்களில் எந்தவிதமான உண்மையும் இல்லை என தெரிவித்துள்ளார்.இந்தியன் 'எக்ஸ்பிரஸ்" என்ற செய்தித்தாளுக்கு இன்று வழங்கிய செவ்வியொன்றிலேயே புகழ்பெற்ற கல்விமானான, பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், இலங்கை தமிழர்களின் பாரம்பரிய கலாசாரம், விழுமியம் மற்றும் தாற்பரியம் போன்றவற்றை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் போது, அதை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரான கார்த்திகேசு சிவத்தம்பி, தமிழகம் கோயம்பத்தூரில் இடம்பெறும் செம்மொழி மாநாட்டில், விசேட அதிதியாக கலந்துகொண்டுள்ளார்.
செம்மொழி மாநாட்டு ஏற்பாட்டாளர்களான, பல்வேறு துறைகளைச் சேர்ந்த கல்விமான்களால் எழுதப்பட்ட 20 நூல்களை, பேராசிரியர் இன்று வெளியிட்டு வைத்தார்.
ஏற்கனவே தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அதனை இந்திய மத்திய அரசாங்கமும் அங்கீகரித்திருந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



0 Responses to செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ள தமக்கு அழுத்தங்கள் எதுவும் விடுக்கப்படவில்லை