இவ்வாறுதான் அன்றும் அதாவது கடந்த ஜனவரி மாதம் கிளிநொச்சியின் கணேசபுரம் பகுதியில் இரண்டு இளம் யுவதிகள் பாலியல் வல்லுறவிற்கு உட்படத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு உடலங்களாக எடுக்கபட்டன.
ஆனால் அன்றைய நிலையில் மக்களின் அச்சம் காரணமாகவும் சிறீலங்காப்படையின் ஆக்கிரமிப்பு காரணமாகவும் மூடிமறைக்கப்பட்டு விட்டது. இன்னிலையில் தற்போது வன்னியில் மக்கள் குடியேறிக்கொண்டிருக்கின்றார்கள். ஆண்கள் அற்ற வன்னிமண்ணாகவும் இளம் விதவைகளை தாங்கிய வன்னிமண்ணாகவும்தான் தற்போது காணப்படுகின்றது.
இளம் சமுதாயத்தை காண்பது என்பது கடினம். தற்போது இருபது அகவைக்கு உட்டபட்டவர்களும் முப்பது அகவைக்கு மேற்பட்ட திருமணம் ஆன ஆண் பெண்களைத்தான் காணமுடிகின்றது. இளைஞர்கள் என்பது அங்கு இல்லை. தமிழ் மக்களின் இளம் வீரியம் முற்றாக இல்லாதொழித்து விடப்பட்டுள்ள நிலையில்தான் வன்னிமண் காணப்படுகின்றது.
ஆனால், இளம் படையினரை பரவலாக காணக்கூடியதாக இருக்கின்றது. பச்சை உடுப்புடனும் படைச்சீருடையுடனும் இளம் சிறீலங்காப்படையினர் பரவலாக முகாம்கள் அமைத்து நிலைகொண்டுள்ளார்கள். இவ்வாறன நிலையில் தான் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
றெட்பானாவில் பாலியல் கொடுமைபுரிந்த சிறீலங்காப்படையினருக்கு இன்று 14 ஆம்நாள் ஆள் அடையாள அணிவகுப்பு நடைபெறவுள்ளதான செய்தி வெறும் செய்தியாகத்தான் இருக்கும். இவ்வாறு அன்று எத்தனையோ ஆள் அடையாள அணி வகுப்புக்கள் நடந்தேறியுள்ளன.
யாழ்ப்பாணத்தில் கிருசாந்தி படுகொலைக்கும் இவ்வாறுதான். ஏன் அண்மையில் மட்டக்களப்பில் மீளக்குடியேறிய மக்களில் பாடசாலை மாணவி ஒருவரை துரத்தி பிடித்த சிறீலங்காப்படையினர் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கியுள்ளது மருத்துவ பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், அதன்பின்பு மட்டக்களப்பு நீதிமன்றத்தில் படையினரை ஆள்அடையாள அணிவகுப்பிற்கு விடப்பட்டதுதான். அதன்பின்பு என்ன நடந்தது என்பது அனைவரும் அறிந்திருப்பீர்கள்.
இவ்வாறுதான் வுவனியா கனகராயன் குளம் பகுதியில் உள்ள பெரியகுளம் என்ற பகுதியில் பல தமிழ் பெண்கள் சிறீலங்காப்படையினரால் பாலியல் வல்லுறுவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பதான தகவல்கள் தற்போது வெளிவரதொடங்கியுள்ள நிலையில், வன்னியில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்கள் அச்சம் காரணமாகவும் தொடர்ந்தும் நாங்கள் இதே இடத்தில்தான் வாழப்போகின்றோம், இதனை வெளியில் கொண்டுவந்தால் எங்களை இங்கு வாழவிடுவார்களா என்ற ஏக்கத்தவிப்பிலும் தொடர்ந்தும் மக்களுடன் வாழவேண்டிய நிலையின் காரணமாகவும், இவ்வாறான நிகழ்வுகள் குறித்து வெளியில் தெரிந்தால் அவமானம் என்ற நிலையிலும் சிறீலங்காப்படையினரால் ஏற்படுத்தப்படும் இவ்வாறன நிகழ்வுகளை மூடிமறைக்கின்றார்கள்.
இதுதான் தற்போது வன்னிமக்கள் எதிர்கொள்ளும் சிறீலங்காப்படையின் பாலியல் போர். வன்னியை பொறுத்தமட்டில் தற்போது மக்கள் ஏனாதோனே என்ற நிலையில் குடியமர்தப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை. ஆனால் அங்கு நிலைகொண்டுள்ள சிறீலங்காப்படையினருக்கு அனைத்து அடிப்படைவசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளது.
இதில்தான் பல்வேறு நிகழ்வுகள் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. சிறீலங்காப்படையினரின் காவலரண்கள் மற்றும் முகாம்கள் அமைந்துள்ள பகுதிகளில்தான் குழாய்கிணறு அமைக்கப்பட்டுள்ளது. நல்ல குடிநீரினை பெற்றுக்கொள்வதாக இருந்தால் படையினரின் முகாம்கள் அரண்களை அண்டியுள்ள குழாய்கிணறுகளைத்தான் மக்கள் நாடவேண்டிய நிலை.
இதனை விட அங்குள்ள மக்களுக்கு நீர்தாங்கி மூலம் நீர் வழங்கலையும் சிறீலங்காப்படையினர்தான் மேற்கொண்டுவருகின்றார்கள். இதன்போது நன்றாக நிலமைகளை அவதானித்த சிறீலங்காப்படையினர் இவ்வாறான பல்வேறு பாலியல் தொடர்பான லீலைகளை மேற்கொள்கின்றார்கள்.
இனிவரும் காலங்களிலும் வன்னிபகுதிமீது சிறீலங்கா அரசு ஒர் சுதந்திர நடமாட்டதை விடாதவரையில் இவ்வாறன நிகழ்வுகள் நடந்தேறத்தான் செய்கின்றன.
சங்கதிக்காக சுபன்.



0 Responses to அரச படையினரின் பாலியல் வல்லுறவு போரினை எதிர்கொள்ளும் வன்னிமக்கள்