Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2010ஆம் ஆண்டிற்கான பிரித்தானிய தமிழர் மெய்வல்லுனர் போட்டி வட லண்டனிலுள்ள லீ வலி தடகள மையத்தில் (Lee Valley Athletics Centre) இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

காலை 11:00 மணியளவில் ஆரம்பித்த நிகழ்வில் முதலில் அணிவகுப்பு இடம்பெற்றது. தமிழ் இன்னிய அணியிசையினர் முன்னே செல்ல அதற்குப் பின்னால் ஐந்து இல்லங்களையும் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அணிவகுப்பை மேற்கொண்டனர்.

அணிவகுப்பு மரியாதையை பிரித்தானிய ஆளும் கொன்சவேடிவ் கட்சியின் இல்போர்ட் வடக்கு (Ilfort North) நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழத்தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான லீ ஸ்கொட், கிங்ரன் நகரசபை உறுப்பிரும், முன்னாள் நகரபிதாவுமான யோகன் யோகேந்திரன், காப்பாளர்கள் திருமதி தவதேவா, மருத்துவர் தெய்வேந்திரா ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.

இதனையடுத்து நடுவர்கள், பொறுப்பாளர்கள், போட்டியாளர்கள் உறுதியுரை எடுத்துக்கொண்டதுடன், பிரித்தானிய தமிழர் மெய்வல்லுனர் அமைப்பின் தலைவர் றெஜி அன்சல்மார், நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஸ்கொட் ஆகியோர் ஆரம்ப உரையாற்றினார்கள். பாரத சூடாமணி சிறீமதி வச்தகுமாரியின் கென்ரன் தமிழ் பாடசாலை மாணவிகள் வழங்கிய பாரம்பரிய நடனம் இடம்பெற்றதைத் தொடர்ந்து, மெய்வல்லுனர் போட்டிகள் ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

இதில் பிரித்தானியாவில் வாழும் ஈழத்தமிழ் வீரர்கள் ஆயிரத்தி ஐநூறிக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வட மேற்கு லண்டன் பச்சை, தென் மேற்கு லண்டன் சிவப்பு, வட கிழக்கு லண்டன் மஞ்சள், தென் கிழக்கு லண்டன் நீலம், மற்றும் லண்டனிற்கு வெளியேயுள்ள போட்டியாளர்கள் செம்மஞ்சள் எனப் பிரிக்கப்பட்டு இல்ல ரீதியாக ஏற்கனவே சில போட்டிகள் இடம்பெற்று இன்று இறுதிப்போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

0 Responses to பிரித்தானிய தமிழர் மெய்வல்லுனர் போட்டி 2010 நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com