Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய நாடுகள் சபையினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆலோசனைக்குழுவினை கலைக்கவேண்டும் இல்லையேல் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலக பணியாளர்களை பயணக்கைதிகளாக வைத்திருப்போம் என்று சூளுரைத்துவிட்டு சிங்கள மக்களை உசுப்பேத்திவிட்டு அதனை நடத்தியும் முடித்துள்ளார் சிறீலங்கா அரசின் அமைச்சர் விமல்வீரவன்ச.

இதன் மூலம் ஐக்கிய நாடுகள் சபையும் பன்நாடுகளும் சிறீலங்கா அரசின் சர்வதிகார போக்கினை புரிந்துகொள்ளவேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீமூனினால் அமைக்கப்பட்ட மூவர் அடங்கிய ஆலோசனைக்குழுவை கலைக்கவேண்டும் என்ற நோக்கிலும் சிறீலங்கா அரசதலைவர் மற்றும் அவரது உடன்பிறப்புக்களை போர்குற்றவாளிகளாக இவர்கள் அறிவிக்கப்போவதாக சிங்கள மக்களிடம் விதைக்கப்பட்ட கருத்துக்களை கொண்டும், கொழும்பில் பான்கீமூனின் கொடும்பாவி எரிக்கப்பட்டு இனவாத ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளார்கள்.

இதில் ஒன்றினை காணக்கூடியதாக உள்ளது இந்த இளம் பௌத்த துறவிகளுக்கும் இனவாதம் ஊட்டப்பட்டுள்ளது என்பதை ஒளிப்படம்மூலம் காணக்கூடியதாக உள்ளது.

டப்பிளிங் தீர்பாயத்தால் விதிக்கப்பட்ட தீர்வின் பிரகாரம், போர்குற்றவாளிகளை கொண்டுள்ள சிறீலங்கா அரசும் அதனை மூடிமறைக்க துடிக்கும் இனவாத போக்குக்கொண்ட அமைச்சர்களையும் கொண்ட சிறீலங்கா அரசு மீதான பான்கீமூனின் விசாரணை எவ்வாறு அமையபோகின்றது என்பதை நிகழ்காலம்தான் பதில்சொல்லும்.

0 Responses to சிறீலங்கா அரசின் சர்வதிகாரம் விமல்வீரவன்சவினால் வெளிக்காட்டப்பட்டுள்ளது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com