Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யூலை 5ம் திகதி.கரும்புலிகள் தினம்.

தாயகம்முழுவதும் சிங்களபேரினவாதத்தின்

ஆளுகைக்குள்இருக்கும் ஒரு மந்தமான பெருமௌனப் பொழு தொன்றில் இம்முறை

கரும்புலிகள்நாள் வந்துள்ளது. விடுதலைப் போராளிகள் என்றாலேயே தங்களை

முழுமையாக அர்ப்பணித்தவர்கள் என்பதேஆகும்.அதிலும் கரும்புலிகள் இன்னும்

முன்னின்றவர்கள். நாள் குறித்து, இடம்தெரிவுசெய்து, நிதானம் காத்து, நாள்க்கணக்கான

வருடக்கணக்கான பொறுமை கடைப்பிடித்து இலக்கின் அண்மையில் போய்வெடிக்

கும் தற்கொடையாளர்களின் தியாகம் ஒப்புவமை இல்லாதது. தமிழர்களின்

விடுதலைப்போராட்டத்தின் அதிஉயர்ந்ததும், உச்சமானதுமான போர் ஆயுதமாகவே

கரும்புலிகள் எழுந்திருந்தார்கள். உலகவரலாறு முழுவதும் சமூகமாற்றங்களுக்கா

கவும்,சுதந்திரத்துக்காகவும்,உரிமைகளுக்காகவும் எண்ணிலடங்காத போராட்டங்க

ள் நடைபெற்றுள்ளன. அந்தப்போராட்டங்களுக்கு உள்ளாகவே உலகவரலாறு நகர்

ந்துவந்துள்ளது.அப்படியான அனைத்து போராட்டங்களிலும் வெளிக்காட்டப்பட்ட

அர்ப்பணிப்புகளில் மிகஉயர்ந்தஈகத்தை செய்தவர்களில் கரும்புலிகள் முதன்மை

யானவர்களாக என்றும் இருப்பார்கள்.

தேசியத்தலைவர் கரும்புலிகளின் உருவாக்கம் பற்றி சொன்னதைப்

போலவேபலவீனமான எமது இனத்தின் பலமிக்க ஆயுதம்என்பதே கரும்புலி

கள் என்பதற்கான வரைவிலக்கணமாக எக்காலமும் இருக்கும்.இதற்குமுன்னரே

எல்லோரும் சொன்னதைப்போலவே கரும்புலிகள் பற்றி முழுமையாக எழுதவோ

பேசவோ யாராலும் முடியாதிருக்கும். ஆனாலும் கரும்புலிகளை எழுதவோ பேச

வோ மறுத்து தமிழர்வரலாறு எழுதப்பட இனிமுடியாது.

நீண்ட நாள்க்கணக்கான,மாதக்கணக்காக நீடிக்கும் சமர்கள்

செய்துமுடிப்பவற்றை கரும்புலிகள் ஒருநொடிக்குள் தங்களின் வெடிஅதிர்வுடன்

செய்துமுடித்திருக்கிறார்கள்.பலநூற்றுக்கணக்கான,ஆயிரக்கணக்கான வீரர்கள்

இணைந்து செய்துமுடிக்கவேண்டிய முன்னெடுப்பை கரும்புலி தனிஒருமனிதனாக

செய்துமுடித்திருப்பான்.எந்த யுத்தவரையறையும்,போரியல்வியூகமும் அவர்களை

அளவெடுக்க முடிந்ததில்லை.வெறும் கட்டுரையால் அவர்களின் விஸ்வரூபத்தை

வெளிக்காட்டுவது கொஞ்சம்கடினம் என்பதால் ஒரு சின்னக்கவிதையால் அவர்க

ளை எழுதுகிறேன்.

அக்கினிக்குஞ்சுகள்

——————————————————–.

ஆதிக்கப்பெரும் காடெரிக்க எழுந்த

அக்கினிக்குஞ்சுகளின் நாள் யூலை5.

தேச விடுதலைக்காக தேகமுழுதும்

வெடிகுண்டுகாவிய வீரக் கரும்புலிகளின்

நினைவு சுமந்த பொழுதுஅது.

கரும்புலிகள்!

காரிருளே எங்கும் நிறைந்த

இரவைக்கிழித்து

சோதிப்பெரு வெளிச்சம் காட்டிய

எங்களின் குட்டிச்சு10ரியன்கள்.

வெந்நீர் விரலில் பட்டாலே

விதிமுடிந்தது போல கதறும்

நம்மில் இருந்து

வெடியதிர்வில் உடல்சிதறும்

நேரம் அறிந்தும் புன்னகை ஒன்றுடனேயே

உலாவந்த அதிசயப்பிறவிகள் இவர்கள்.

உயிர்பூவை ஒருகணத்தில் ஊதிவிட்டு

வெடியதிர்வை திசைகளெங்கும் பரவவிட்டு

உடல்சிதறப் போய்வெடிக்கும் உன்னதத்தின்

உன்னதங்கள் இவர்கள்.

போய்வெடிக்கும் நேரம் தெரிந்திருந்தும்

ஏதும் கலக்கமின்றி இலக்கை தேடிநடந்து

ஒரு சின்ன நொடிக்குள்ளாக

காற்றில் கலந்துவிட இவர்களால்

எப்படித்தான் முடிகிறதோ..?

எல்லோருக்குள்ளும் இல்லாத பெருநெருப்பு

எப்படியாய் இவர்களுக்குள் மட்டும்

மையம் கொள்கிறதோ

சின்னத் தடிமன் காய்ச்சல் என்றாலே

இல்லாத மருந்தெல்லாம் தேடும் உலகில்

எல்லாம் உதறிவிட்டு போய்வெடிக்க

இவர்களுக்கு மட்டும் எப்படி முடிகிறது..?

தங்களையே தற்கொடைதந்த எங்கள்

பிள்ளைகளுக்காய் என்ன கைமாறு செய்தால்

நன்றிக்கடனை அடைக்கலாம் நாம்.

கைகுவித்து கும்பிடலாம்.

கவிதை வடிக்கலாம்.- நினைவுப்

பொழுதில் ஒன்றுகூடலாம்.

ஏதோ ஒரு மலரை எடுத்து அவர்

நினைவில் வைக்கலாம்.- ஆனால்

இவை மட்டும் போதுமா அவர்

நினைவை மீட்க..?

இன்னும் இருள்கலையாதிருக்கும்

எங்கள் தேசத்தின் விடுதலைக்காய்

ஏதேனும் செய்வதுதான்

இந்த அக்கினிக் குஞ்சுகளுக்கு

எம்மால் ஆன நன்றிகள் ஆகும்.

0 Responses to வீசும்காற்றுடன் கலந்தவர்கள்: ச.ச.முத்து

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com