Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கொழும்பிலுள்ள .நா அலுவலக முற்றுகைப் போராட்டத்திற்கு சிறீலங்கா அரசாங்கம் மறைமுக ஆதரவு வழங்கி வருவதை, தமது கொழும்புச் செய்தியாளர் உறுதிப்படுத்தியுள்ளதாக பி.பி.சி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான சிங்கள பௌத்த இனவாதிகள் மேற்கொள்ளும் முற்றுகைப் போராட்டத்தை காவல்துறையினர் கலைக்க முற்பட்டபோது, பாதுகாப்பு அமைச்சின் செயலர் கொட்டாபய ராஜபக்சவிற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட அமைச்சர் விமல் வீரவன்ச அதனை அனைவரும் கேட்கும் வகையில் ஸ்பீக்கரில் விட்டு பேசியுள்ளார்.

இதன்போது காவல்துறையினரைக் கலைந்து செல்லுமாறு கொட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டதாக பி.பி.சி தெரிவித்துள்ளது.

0 Responses to அரசின் ஆதரவுடனேயே முற்றுகைப் போராட்டம்: பி.பி.சி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com