அமைச்சர் விமல் வீரவன்ஸ ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த போது, அரசாங்கத்தின் ஏனைய அமைச்சர்கள் அனைவரும் அலரி மாளிகையில் இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றில் கலந்துகொண்டிருந்ததாக கூறப்படுகிறதுஇந்த விருந்துபசாரத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே ஏற்பாடு செய்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
நாடாளுமன்றில் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்து ஜனாதிபதி மாளிகையில் மகிந்த ராஜபக்ஷ விருந்து வழங்கியுள்ளார்.
இது அரசியல் ரீதியாக சில மனக்கசப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
பிரதான அமைச்சர் ஒருவர், உண்ணாவிரத போராட்டத்தில் இருக்கும் போது, ஏனைய அமைச்சர்கள் விருந்துபசாரம் ஒன்றில் உண்டுகளிப்பது, அரசியல் ஒற்றுமை இன்மையை எடுத்துக்காட்டுவதாக கூறப்படுகிறது.
இதேதினத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலதா அத்துகோரளவும் விருந்து உபசாரம் ஒன்றை கொழும்பில் நடத்தியுள்ளார்.
இதில் ரவி கருணாநாயக்க, ரஞ்சன் ராமநாயக்க, சஜீத் பிரேமதாஸ உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
எனினும் இந்த விருந்துபசாரத்துக்கு ரணில் விக்ரமசிங்க மற்றும் கரு ஜெயசூரிய ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
அவர்கள் அன்றைய தினத்தில் வேறு இடத்தில் நடந்த விருந்துபசாரங்களில் கலந்து கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



0 Responses to வீரவன்ஸ உண்ணாவிரதம் இருந்தபோது அலரி மாளிகையில் விருந்துபசாரம்