திருகோணமலை, சேருநுவர பகுதியில் நேற்று முன்தினம் இராணுவத்தினர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மற்றொரு இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், இரண்டு இராணுவத்தினர் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.இதையடுத்து குறித்த இராணுவத்தினன் துப்பாக்கியுடன் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிகாரிகளுடன் அதிருப்தியுற்ற நிலையிலேயே இவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மற்றைய இராணுவத்தினர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாகவும், லெப்ரினன்ற் தர அதிகாரியொருவரும் பொது மகனொருவரும் இராணுவத்தைச் சேர்ந்த மற்றொருவரும் படுகாயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து அங்கிருந்து ஆயுதத்துடன் தப்பியோடியவரைக் தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சேருநுவர பொலிஸார் இது தொடர்பாக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
படுகாயமடைந்த மூவரும் சேருநுவர மருத்துவமனையில் பின்னர் திருகோணமலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.



0 Responses to திருகோணமலையில் இராணுவத்தினரிடையே மோதல்; ஒருவர் பலி! மூவர் படுகாயம்!