Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜீலை 5 கரும்புலிகள் நாளை முன்னிட்டு சிட்னியில் நேற்று 10ம் திகதி கரும்புலிகள் நினைவெழுச்சி நாள் மிக உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் 400க்கும் அதிகமான மக்கள் எழுச்சியுடன் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வு வென்வர்த்வில் ரெக்டம் மண்டபத்தில் மாலை 7 மணிக்கு கொடி ஏற்றத்துடன் ஆரம்பமானது. அதனை தொடர்ந்து மண்ணின் விடுதலைக்காக உயிர் நீத்த மாவீரர்களுக்கும் சிங்கள இந்திய படைகளால் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கரும்புலிகளின் உயிர்தியாகத்தையும் தாய் மண்ணின் மேல் கொண்ட அளவற்ற காதலால் தமது உறவுகளை விட்டு பிரிந்து தமது இளமைக்கால கனவுகளை துறந்து உயிர் பிரிந்த தேசப்புதல்வர்களைப் பற்றி நிகழ்வில் உரையாற்றிய அனா பரராஐசிங்கம் மற்றும் தமிழர் இளையோர் அமைப்பை சேர்ந்த செந்தூராவும் தமது உரையில் எடுத்துரைத்தனர்.

அதனை தொடர்ந்து பாடலும் நாட்டியமும் இடம்பெற்றது. புதிதாக வெளியிடப்பட்ட இறுவேட்டிலிருந்து சில துணுக்குகள் திரையில் காண்பிக்கப்பட்டது. மண்ணின் விடிவுக்காக தமது உயிரை துச்சமாக எண்ணி தமது உயிர்களை ஆகுதியாக்கிய அப்புனிதர்களை நினைவு கூறும் மாதம் இது. அம்மறவர்களை நினைவு கூர்ந்து அவர்களின் கனவுகளை நோக்கி பயணிக்க வேண்டிய காலம் இது.

இறுவேட்டு வெளியீட்டுடன் நிகழ்வு முற்றுப்பெற்றது. தமது உயிர்களை ஆகுதியாக்கிய எமது தேசப்புதல்வர்களின் கனவு நிறைவேற நாம் ஆத்மாத்தமாக பிரார்த்தனை செய்வதுடன் எமது செயல்பாடுகளின் ழூலம் அவர்களின் கனவுகளை நோக்கி பயணிப்போம்.

0 Responses to கரும்புலிகள் நாள் சிட்னியில் மிக உணர்ச்சிபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com