Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள வெம்பிளியில் நேற்று (05.07.2010) திங்கட்கிழமை கரும்புலிகள் நாள் நிகழ்வு நடைபெற்றது.

நேற்று வெம்பிளி, சென். மைக்கல் சேர்ச் மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

மாலை 7:00 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் முதலில் ஈகைச்சுடரினை ஓயாத அலைகள் மூன்று படைநடவடிக்கைக்கு வலுச்சேர்த்து வீரகாவியமான மாவீரர் கரும்புலி மேஜர் செழியன் (பாலமுரளி) அவர்களின் தந்தை திரு. மகேந்திரராஜா அவர்கள் ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து கரும்புலிகள் நினைவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. மலர்மாலை அணிவித்தபின் இதுவரை காலமும் போரினால் கொல்லப்பட்ட மக்களுக்காகவும், மாவீரர்களுக்காகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 2ஆம் லெப்ரினன் பூபதி (நிலா), மேஜர் இலங்கேஸ்வரன் ஆகிய இரண்டு மாவீரர்களின் சகோதரனான திரு குகதாஸ் அவர்கள் நிகழ்வை தொடர்ந்து முன்னின்று நடத்தினார்.

இந்த நிகழ்வில் அதிகமான மக்கள் வருகை தந்திருந்ததுடன் உணர்வுபூர்வமாக தமது வரலாற்றுக் கடமையையும், அஞ்சலிகளையும் செலுத்தி சென்றதை காணக்கூடியதாக இருந்தது.

0 Responses to லண்டனில் நடைபெற்ற கரும்புலிகள் நாள் நிகழ்வு: (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com