ஐ.நாவின் நிபுணர்குழுவை கலைப்பதாக உத்தரவாதம் தரப்பட்டால் மாத்திரமே கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலர்களை அலுவலகத்தை விட்டு வெளியேற முடியும் என்று அமைச்சர் விமல் வீரவங்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஹெர்ட்ஸ் பார்க்கிலிருந்து ஆரம்பித்து அமைச்சர் விமல் வீரவஞ்ஸ தலைமையிலான சுமார் ஆயிரம் பேர் கொண்ட பேரணி மதியமளவில் புல்லர்ஸ் வீதியில் அமைந்துள்ள ஐ.நா. அலுவலகத்தை சென்றடைந்தது.
தமது கோரிக்கைக்கு ஏற்ப ஐ.நா. தனது முடிவை அறிவிக்கும் வரை தமது ஆதரவாளர்கள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாகவும் ஐ.நா. தலைமையகம் சாதகமான முடிவை அறிவிக்கும்வரை தாம் அங்கிருந்து கலையப்போவதில்லை என்றும் அமைச்சர் விமல் வீரவங்ஸ தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஐ.நா. அலுவலகத்துக்கு வெளியே செயலாளர் நாயகம் பான் கீ மூனின் கொடும்பாவியையும் எரித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஐ.நா. அலுவலகத்திற்குள் சென்றுவிடாதவண்ணம் அலுவலகத்தை சுற்றி பாதுகாப்பு தடைகளை அமைத்து பெருந்தொகையான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தினர் தாம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளமை குறித்து நியூயோர்க்கிலுள்ள தலைமையகத்துக்கு தகவல் அனுப்பியுள்ளதாகும் நியூயோர்க்கிலுள்ள அதிகாரிகள் இது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுக்களில் ஈடுப்பட்டுள்ளதாகவும் தெரிவியவருகிறது.








0 Responses to கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் அமைச்சர் விமல் ஆதரவாளர்களால் சுற்றிவளைப்பு!