Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வதைமுகாம்களில் இருந்து எடுக்கப்பட்ட கே.பியின் செயற்பாட்டாளர்கள் பன்நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.

வன்னியில் சிறீலங்காப்படையினரின் இறுதிக்கட்ட போர் நடவடிக்கையின்போது சரணடைந்த விடுதலைப்புலிகளின் முதன்மை உறுப்பினர்கள் சிலர் சிறீலங்காப்படையின் புலனாய்வாளர்களாக மாற்றப்பட்டு செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற நிலையில், சிறீலங்கா புலனாய்வாளர்களிடம் சரணடைந்த கே.பி. சிறீலங்காப்படையின் மேற்பார்வையின் கீழ் தற்போது உலாவந்துகொண்டிருக்கின்றார்.

இன்நிலையில் வவுனியா மற்றும் ஏனைய மாவட்டங்களில் சிறைகளில் அடைக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் முதன்மை உறுப்பினர்களை கே.பி அண்மையில் சந்தித்து தனது செயற்பாட்டிற்காகவும் சிறீலங்காப்படையின் புலனாய்வின் செயற்பாட்டிற்காகவும் மாற்றியுள்ளார்.

விடுதலை செய்யப்பட்டுள்ள அதேவேளை சிலர் இரகசியமாவும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். இவ்வாறு இரகசியமாக விடுதலை செய்யப்பட்டவர்கள் தாங்கள் விடுதலைபுலிகள் என்ற பெயரில் பன்நாடுகளுக்கு தனித்தனியாக கே.பியின் ஏற்பாட்டில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்;கு பன்நாடுகளில் உள்ள கே.பி குழுவினரின் தொடர்புகளும் வழங்கப்பட்டுள்ளது.

பன்நாடுகளில் விடுதலைச் செயற்பாடுகளை முடக்கும் நோக்குடனும், இவர்கள் ஊடாக நிதிதிரட்டும் நோக்குடனும், விடுதலை உணர்வாளர்களை இனம்காணும் நோக்குடனும் தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தியா, மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாங்கள் விடுதலைப்புலிகள் என்ற பெயரில் இவர்கள் உங்கள் முன்னிலையில் வலம் வருவார்கள். புலம்பெயர் தமிழ் மக்கள் விழிப்பாக இருந்துகொள்ளுங்கள்.

0 Responses to புலம்பெயர் நாடுகளில் விடுதலைப்புலிகளின் போர்வையில் கே.பி குழுவினர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com