யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ்ப் பெண் ஒருவர் அவுஸ்திரேலிய செனற் சபைத் தேர்தலில் கிறீன் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுகின்றார்.
பிராமி ஜெகன் என்ற 30 வயதுடைய முன்னாள் ஊடகவியலாளரே இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றார். சிறிலங்கா அரசின் யுத்த நடவடிக்கை காரணமாக குடும்பத்தினருடன் நாட்டை விட்டு வெளியேறி சோமாலியா, தன்சானியா, மலேசியா போன்ற நாடுகளில் தங்கியிருந்து பின் தற்போது அவுஸ்திரேலிய பிரஜையாக, அந்த நாட்டுத் தேர்தல் களத்தில் குதித்துள்ளார்.
கிறீன் கட்சி இவரை செனற் வேட்பாளராக நிறுத்தியுள்ளது. தமிழ் சமூகத்துக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டுமென்ற நோக்கத்திலேயே இத்தேர்தலில் போட்டியிடுவதாக செல்வி பிரேமி ஜெகன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அவுஸ்திரேலியாவிற்குப் புகலிடம் தேடி வரும் ஈழத் தமிழ் அகதிகளுக்குப் பாதுகாப்பான புது வாழ்வைப் பெற்றுக்கொடுப்பதே தனது முக்கிய பணியாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.



0 Responses to தமிழ்ப் பெண் ஒருவர் அவுஸ்திரேலிய தேர்தலில் போட்டி!