உண்ணாவிரதம் இருப்பதற்கு அமைச்சர் விமல் வீரவன் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும், இந்தியாவுக்கு எதிரான போக்கினை கடைப்பிடிக்கின்ற அவர், மனம் வைத்து ஹிந்திப் படங்களை பார்த்தால், பொய்யான உண்ணாவிரதங்களை கற்றுக் கொள்ளமுடியும் என த ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளது.அத்துடன், அமைச்சர் ஒருவரின் உண்ணாவிரதத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை ஒருபோதும் தலை அசைக்காது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் விமல் வீரவன்ஸவின் உண்ணாவிரதத்தினால், சர்வதேச மட்டத்தில் இலங்கையின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளது என கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இலங்கைக்கு ராஜதந்திர ரீதியாக பின்னடைவை ஏற்படுத்திய வீரவன்ஸ மேற்கொண்ட இந்த உண்ணாவிரதம், அவருக்கு புகழை சம்பாதித்து தந்துள்ளது.
இதற்கிடையில் அமைச்சரின் போராட்டத்தை கணக்கெடுக்காத ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு, விரைவில் சந்திப்பை ஏற்படுத்திக் கொள்ளவுள்ளது.
எந்த நிலையிலும் இந்த குழு தமது பணியை செய்யும் என ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்த போராட்டத்துக்கு அரசாங்கம் அனுசரணை வழங்கியது என்பது, பாதுகாப்பு செயலாளர் அங்கிருந்த பொலிஸார் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என உத்தரவிட்டதாலும், வெளிநாட்டு அமைச்சர் இது தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டதாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அமைச்சர் விமல் வீரவன்ஸ தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதியை விட சிறந்த உண்ணாவிரதத்தையே மேற்கொண்டுள்ளதாக தெ ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
கருணாநிதி இலங்கை தமிழர்கள் தொடர்பில் 6 மணித்தியால உண்ணாவிரதம் ஒன்றையே மேற்கொண்டிருந்தார் என்பதை அந்த பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.



0 Responses to வீரவன்ஸ ஹிந்திப் படங்களை பார்த்தால், பொய்யான உண்ணாவிரதத்தை கற்றுக்கொள்ளலாம்