Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்திய வெளிவிவகார அமைச்சின் அவசர அழைப்பின் பேரில் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் அறுவர் கொண்ட குழு இன்று மாலை புதுடில்லி புறப்படுகிறது. கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், .விநாயகமூர்த்தி, செல்வம் அடைக்கலநாதன், எம்..சுமந்திரன் ஆகியோர் கொண்ட குழுவே மூன்று நாள் விஜயமாக இன்று புறப்படுகிறது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எம். கே.கிருஷ்ணா, வெளிவிவகாரச் செயலா ளர் நிருபமாராவ், உள்துறை அமைச்சர் . சிதம்பரம் ஆகியோரைக் கூட்டமைப்பினர் சந்தித்துப் பேச்சு நடத்துவர்.

இனப்பிரச்சினைக்கு ஆக்கபூர்வமான தீர்வு ஒன்றை எட்ட இந்தியாவின் பங்களிப்பு, இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வு ஆகிய விடயங்களுக்கே பேச்சில் முன்னுரிமை வழங்கப்படும் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்றிரவு உதயனுக்குத் தெரிவித்தார்.

0 Responses to தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று இந்தியாவுக்கு அவசர பயணம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com