Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தாய்லாந்தில், தாய்லாந்து இராணுவத்தினரும் கனேடியன் இன்டர்போல் பொலிஸாரும் இணைந்து நடத்திய சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது 130ற்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுள் 60 ஆண்கள், 50 பெண்கள், 7 கர்ப்பிணித் தாய்மார்கள், 13 குழந்தைகளும் உள்ளனர்.

இவர்களுள் விசா இன்றி அங்கு தங்கியிருந்த தம்மை அகதிகளாக ஐக்கிய நாடுகள் அமைப்பில் பதிவு செய்திருந்த இலங்கை அகதிகளும் கப்பலில் கனடாவிற்கு செல்வதற்காக வந்திருந்த அகதிகளும் கைது செய்யப்பட்டு தாய்லாந்து குடிவரவு திணைக் கள சிறப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

நேற்றுக் காலை 6.30 மணியளவில் தாய்லாந்தின் ஒன்சபோன், சபான்மை, பொம்சிங் மற்றும் சபான்மை பிக்சி சுற்று வட்டாரப் பிரதேசங்களை திடீரென சுற்றிவளைத்த தாய்லாந்து குடிவரவு திணைக்கள அதிகாரிகள், தாய்லாந்து இராணுவத்தினர் மற்றும் கனேடிய இன்டர்போல் பொலிஸார் இவர்களை கைது செய்து கொண்டு சென்றுள்ளனர். அத்துடன், சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையினை கனேடியன் இன்டர்போலும், தாய்லாந்து இராணுவத்தினரும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தாய்லாந்திலிருந்து கப்பலில் கனடாவுக்கு இலங்கையர்களை அனுப்பிவரும் நடவடிக்கையினை கட்டுப்படுத்தவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இவர்களை அனுப்பி வைக்கும் பிரதான முகவர்கள், உதவி முகவர்கள், சந்தேக நபர்கள் தப்பியோடி விட்டதாகவும் தாய்லாந்து குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன், நேற்றுக் காலை இடம்பெற்ற சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டு சிறப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்ட வேளை தாய்லாந்து குடிவரவு திணைக்கள அதிகாரிகளைத் தாக்கிவிட்டு, 15 இலங்கையர்கள் தப்பியோடி விட்டதாகவும் இதனைத் தொடர்ந்து தாய்லாந்து இராணுவமும் கனேடியன் இன்டர்போலும் தொடர்ந்து தேடுதல்களை நடத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to தாய்லாந்தில் தமிழர்கள் சுற்றிவளைப்பு! 13 குழந்தைகள் உட்பட 130 மேற்பட்டோர் கைது!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com