Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் மக்களவைகளும் இணைந்து பிரான்சில் நிகழ்வொன்றை நடத்துவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளமை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இது தொடர்பாக என்னுடன் எவரும் தொடர்பு கொள்ளவுமில்லை.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அலுவலுகத்திடம் அனுமதி பெறாத நிகழ்வுகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பங்கு பற்றும் நிகழ்வுகளாக நாம் பார்க்கமுடியாது. இதனால் நடைபெறுவதாகக்கூறப்படும் நிகழ்வுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் எதுவித தொடர்புகளும் இல்லை.

இங்கு ஒரு விடயத்தை நாம் பிரித்துப் பார்க்க வேண்டும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்கள் வெவ்வேறு நிகழ்வுகளில் பங்கு பற்றக்கூடும். இந் நிகழ்வுகளையெல்லாம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிகழ்வுகளாக நாம் கொள்ள முடியாது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வுகள் அமைச்சரவையின் ஊடாகவே தீர்மானிக்கப்படும். நாம் இந்தவார இறுதிக்குள் அமைச்சரவையை அறிவிக்கவுள்ளோம். அதுவரையிலான இடைக்காலத்துக்கு பிரதமர் அலுவலகம்தான் இவ்விடயங்களைக் கவனித்து வருகிறது.

எமது அமைச்சரவை இயங்கத் தொடங்கியதும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருபினர்களுக்காக செயற்பாட்டு நடைமுறையொன்றினை (code of conduct ) உருவாக்கவுள்ளோம். மக்களவை உட்பட ஏனைய பொது அமைப்புக்களோடு இணைந்து செயற்படும் விடயங்கள் தொடர்பாக அமைச்சரவையில் ஆராய்ந்து முடிவு செய்யவுள்ளோம் என பிரதமர் திரு. விசுவநாதன் ருத்ரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Secretariat TGTE
secretariat@tgte.org

0 Responses to பிரான்சில் நடைபெறுவதாகக்கூறப்படும் நிகழ்வுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் தொடர்புகளும் இல்லை: விசுவநாதன் ருத்ரகுமாரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com