Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

5வது நாளாக மகேஸ்வரன், பார்த்தீபன் மற்றும் மனோகரன் ஆகிய டென்மார்க் வாழ் புலம்பெயர் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதநேய நடைப்பயணம் நேற்று ஞாயிற்றுக்கிழமை 36 KM தூரம் நகர்ந்து Fyn தீவின் மத்தியில் உள்ள Odense நகரை அடைந்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை இவர்கள் மூவரும் 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து டென்மார்க் அரசிடம் நீதி கேட்டு கேர்ணிங் நகரில் இருந்து இந்த மனிதநேய நடைப்பணயத்தை ஆரம்பித்திருந்தனர்.

இன்று Odense நகரில் இருந்து Fyn தீவின் கிழக்கு கரையில் உள்ள Nyborg நகரத்தை நோக்கி இவர்கள் தமது மனிதநேய நடைப்பயணத்தை நகர்த்தவுள்ளனர். Nyborg நகரமக்களால் மாலை 19.00 மணிக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கலந்துரையாடலில் கலந்துகொள்ளும் மனிதநேய பயணிகள் தொடர்ந்து டென்மார்க்கின் தலைநகர் அமைந்துள்ள தீவை நோக்கி செல்லவிருக்கின்றனர்.

இரண்டு தீவுக்கும் இடையில் பாரிய பாலம் அமைந்துள்ளதால் அதைக் கடப்பதற்கான வழிமுறைகளை டென்மார்க் தமிழர் பேரவையின் மானிட விவகார குழுவினர் ஆராய்ந்து வருகின்றனர்.

முக்கிய குறிப்பு: எதிர்வரும் சனிக்கிழமை டென்மார்க்கின் தலைநகரை சென்றடையும் மகேஸவரன், பார்த்தீபன் மற்றும் மனோகரனை வரவேற்று அங்கே நடைபெற இருக்கும் எழுச்சி ஒன்றுகூடலில் அதிகப்படியான டென்மார்க் வாழ் தமிழீழ மக்களை கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அனைத்து நகரங்களிலும் போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்படுவதாகவும் உங்கள் நகரங்களில் உள்ள தமிழ் அமைப்புகளை அல்லது டென்மார்க் தமிழர் பேரவையின் உங்க நகர தொடர்பாளரை தொடர்பு கொண்டு விபரங்களை பெற்றுக்கொள்ளுமாறும் டென்மார்க் தமிழர் பேரவையின் மானிட விவகார குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நடைப்பயணத்தில் ஈடுபடுவோருடன் தொடர்புகொள்ள தொலைபேசி: (0045)52173671.

காணொளி: இங்கே அழுத்தவும்

0 Responses to 5வது நாளாக தொடரும் டென்மார்க் மனிதநேய நடைப்பயணம் (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com