முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு 30 மாதகால கடுழிய சிறைத்தண்டனை வழங்கியதற்கு மகிந்தாவுக்கு நன்றி தெரிவித்து இத்தாலியில் சுவரொட்டி பிரசாரமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சுவரொட்டி இத்தாலியிலுள்ள விகாரைகள், பௌத்த நிலையங்கள் ஆகியவற்றுக்கு அருகிலும், இலங்கையர்கள் வசிக்கும் மற்றும் நடமாடும் பிரதேசங்களிலுமே ஒட்டப்பட்டுள்ளன.
தமிழர்களை இனப்படுகொலை செய்த இனவெறி சரத் பொன்சேகாவை சிறையில் அடைத்தமைக்கு ஜனாதிபதி மகிந்த அவர்களுக்கு உலகத் தமிழ் மக்களின் நன்றி உரித்தாகட்டும் என அந்தச் சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அதன் கீழே "தமிழ் மக்கள் அமைப்பு" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், அரசியல் பின்புலத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சுவரொட்டிப் பிரசாரமும் குறித்த தமிழ் மக்கள் அமைப்பும் சிறீலங்காவின் ஒரு அரசியல் சூழ்ச்சி என்றே நோக்கப்படுகிறது.






0 Responses to மகிந்தாவுக்கு நன்றி தெரிவித்து இத்தாலியில் சுவரொட்டி: “தமிழ் மக்கள் அமைப்பு”