Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசியல் செயல்பாடுகளில் இருந்து சரத் பொன்சேகா விலகி, நாட்டில் இருந்து வெளியேற எண்ணும் பட்சத்தில் அவருக்கு மன்னிப்பு வழங்க மகிந்த தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இலங்கை ராணுவ தளபதி பதவியில் இருந்து விலகிய சரத் பொன்சேகா, மகிந்தவுக்கு எதிராக அதிபர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ராணுவத்திற்கு ஆயுதம் கொள்முதல் செய்ததில் ஊழல் செய்ததாக பொன்சேகா கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவருக்கு 30 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் சரத் பொன்சேகா அரசியலில் இருந்து முற்றிலும் விலகி நாட்டை விட்டு வெளியேற நினைத்தால், அவருக்கு மன்னிப்பு வழங்க தயாராக இருப்பதாக மகிந்த தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த தகவலை மகிந்த, பொன்சேகாவின் நெருங்கிய உறவினரிடம் அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதர் மூலமாக தெரிவித்துள்ளதாகவும், அதே வேளையில் மன்னிப்பு கோராமல் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இணங்கினாலும் பொன்சேகாவை விடுதலை செய்ய தயாராக இருப்பதாகவும் மகிந்த தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இதற்காக கோரிக்கையை பொன்சேகாவின் நெருங்கிய மதகுரு ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

0 Responses to சரத் பொன்சேகா நாட்டை விட்டு வெளியேறினால் மன்னிப்பு: மகிந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com