Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சரணடையும் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை சுட்டுக்கொல்லுமாறு கோத்தபாய படைஅதிகாரிகளுக்கு கட்டளை வழங்கியதாக சரத் பொன்சேகா தன்னிடம் தெரிவித்தார் என சிறிலங்காவின் பிரபல ஆங்கில பத்திரிகையின் ஆசிரியர் பிறடெறிக்கா ஜென்ஸ் தெரிவித்துள்ளார்.

சர்ச்க்கைக்குரிய "வெள்ளைக்கொடி" விவகாரம் தொடர்பாக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கில் சாட்சியமளிக்கையிலேயே சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் இதனை தெரிவித்துள்ளார்.

தமது பத்திரிகைக்கு சரத் பொன்சேகாவினால் வழங்கப்பட்ட நேர்காணலில் ”சரணடையும் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை சுட்டுக்கொல்லுமாறு பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவால் தொலைபேசி ஊடாக பிரிகேடியர் சவேந்திர சில்வா அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்திருந்தார்” என தனது சாட்சியத்தில் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சிறிலங்கா அரச தலைவருக்கான தேர்தல் நெருங்கிய சமயத்தில் – டிசம்பர் மாதம் எட்டாம் திகதி 2009 அன்று – சரத் பொன்சேகாவின் தேர்தல் அலுவலகத்தில் குறித்த நேர்காணல் இடம்பெற்றதாகவும் குறிப்பிட்டார்.

பிறடெறிக்கா ஜேன்ஸ் மேலும் சாட்சியமளிக்கையில், விடுதலைப்புலிகளின் மூத்த தலைவர்கள் மூன்றாவது தரப்பு நாடுகள் ஊடாக பசில் ராஜபக்சவுக்கு தமது சரணடையும் முடிவை அறிவித்ததாகவும், பசில் ராஜபக்ச அதனை கோத்தபாய ராஜபக்சவுக்கு தெரிவித்ததாகவும் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.

மேலும் குறித்த நேர்காணலை வெளியிடுவதற்கு முன்பாகவும் இத்தகவல் பற்றிய மீள்உறுதிப்படுத்தலை சரத் பொன்சேகாவிடம் கேட்டதாகவும் குறித்த தகவலில் எந்த மாற்றத்தையும் செய்யவேண்டாம் எனவும் சரத் பொன்சேகா கேட்டிருந்தார் எனவும் அவர் மேலும் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.

காயமடைந்த போராளிகளையும் பொதுமக்களையும் காப்பாற்றும் நோக்குடன் விடுதலைப்புலிகள் அரசியல் துறையை சேர்ந்த நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோரின் தலைமையில் ஆயுதங்களை மௌனித்து சரணடைவதாக உள்நாட்டு வெளிநாட்டு தலைவர்கள் ஊடாக முயற்சிகள் செய்யப்பட்டிருந்த நிலையிலேயே இப்படுகொலை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சரத் பொன்சேகாவின் குறித்த நோ்காணலினால்தான் தற்போது ஐக்கிய நாடுகள் சபை தனது விசாரணைக்குழுவை நியமித்துள்ளதாக சிறிலங்கா அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

மீண்டும் இதற்கான விசாரணைகள் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to சரணடையும் விடுதலைப்புலிகளை சுட்டுக்கொல்லுமாறு கோத்தபாய கட்டளை! பொன்சேகா தெரிவித்தாராம்: பிறடெறிக்கா ஜென்ஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com