Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன், முதல் பெண் மாவீரரான 2-ம் லெப்ரினன்ட் மாலதி உட்பட இம்மாதங்களில் வீரச்சாவை தழுவிய அனைத்து மாவீரர்களையும் நினைவுகூரும் எழுச்சிவணக்க நிகழ்வு நேற்று பிரித்தானியாவில் இடம்பெற்றது.

பிரித்தானிய தலைநகர் லண்டனின் கொலிண்டேல் பகுதியில் உள்ள மண்டபத்தில் நேற்று (30-10-2010) பிற்பகல் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெருமளவான மக்கள் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டிருந்தனர்.

நேற்று மாலை 6:30 க்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் மாவீரரான சுது (சதானந்தம் நிர்மலநாத்) அவர்களின் தாயார் திருமதி. ரமணி சதானந்தன் அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றிவைக்க அதனைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது.

அகவணக்கத்தினை தொடர்ந்து மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களினால் மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது.

2-ம் லெப்ரினன்ட் மாலதியின் திருவுருவப் படத்திற்கு மாவீரரான தனா (இராஜேஸ்வரன் தாரணி) அவர்களின் சகோதரி இராஜேஸ்வரன் பாலசதுர்த்திகா அவர்கள் மலர்மாலையை அணிவித்தார்.
பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உட்பட மற்றும் ஆறு போராளிகளின் திருவுருவப் படத்திற்கு மாவீரரான வனஜா/பிரியங்கா (சுந்தரலிங்கம் சுலக்சனா) அவர்களின் பெற்றோர் மலர்மாலை அணிவித்தனர்.

தொடர்ந்து இம்மாதங்களில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களின் நினைவுருவப்படத்திற்கு மாவீரரான பிருந்தன் (இராசையா யசி) அவர்களின் சகோதரர் கஜன் அவர்கள் மலர்மாலையினை அணிவித்தார்.

மலர்மாலை அணிவித்தலைத் தொடர்ந்து மண்டபத்தில் நிறைந்திருந்த மக்களின் மலர்வணக்க நிகழ்வு இடம்பெற்றது.

இந்த எழுச்சிவணக்க நிகழ்வில் எழுச்சி கானங்கள் இசைக்கப்பட்டதோடு, நடன ஆசிரியை லலிதசொரூபினி பிரதீபராஜ் அவர்களின் மாணவிகளும், நடன ஆசிரியை திருமதி.யோகராஜா அவர்களின் மாணவிகளும், செல்வி.பிருந்தா ஸ்கந்ததேவா அவர்களின் நெறியாள்கையில் சக மாணவிகளும் வழங்கிய எழுச்சி நடனங்களும், செல்வி. ஜான்சி அவர்கள் வழங்கியபெண்கள் எழுச்சிபேச்சும் இடம்பெற்றது.

தொடர்ந்து கவிதைகளும் சவுத்கறோ தமிழ்க் கல்விக்கூடத்தினுடைய வயலின் ஆசிரியை காஞ்சனா சிவகுமாரின் மாணவிகள் வழங்கிய வயலின் வாத்திய இசை போன்ற நிகழ்ச்சிகளும் மிகவும் சிறப்பாகவும், காலத்தின் தேவை கருதியதாகவும் அமையப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில்சாட்சிஎனும் பெயர் கொண்ட தாயகத்து வேதனைகளையும், சாட்சிகளையும் சுமந்த கவிதை நூல் தொகுப்பு வெளியிட்டு வைக்கப்பட்டது. நூல் வெளியீட்டில் பெருமளவான மக்கள் அந்த நூலை பெற்றுச்சென்றதை காணமுடிந்தது.

இந்த நிகழ்வின் போது இவ்வருடத்திற்கான மாவீரர் நாள் நிகழ்வுகள் வழமைபோல் இம்முறையும் நவம்பர் 27-ம் திகதி சனிக்கிழமை லண்டன்எக்ஸ் எல்மண்டபத்தில் நடைபெறும் என்ற தகவலும் மக்களின் வசதிகருதி முட்கூட்டியே அறிவிக்கப்பட்டது.

மாலை 6:30 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வு மிகவும் எழுச்சிகரமாகவும் இடைவேளை இன்றி தொடர் நிகழ்வாகவும் இடம்பெற்றதோடு மக்கள் எதிர்பார்ப்பது போன்ற ஒரு சிறப்பு எழுச்சி வணக்க நிகழ்வாக இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.










0 Responses to பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவு நாள்: லண்டன் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com