மதுரையில் இலங்கை தமிழர்கள் போரினால் பட்ட துயரங்களை சித்தரிக்கும் போர் முகங்கள் என ஓவியர் புகழேந்தியின் ஓவியக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
இதனை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஐ.நா. அவை, ஐரோப்பிய ஓன்றியம் போன்றவை இலங்கை அதிபர் ராஜபக்சேவை, பன்னாட்டு போர் குற்றவியல் கூண்டில் நிறுத்த வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறது. இலங்கை தமிழர்களுக்கு துரோகத்துக்கு மேல் துரோகம் செய்து கொண்டிருக்கிறது இந்திய அரசு.
71 நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் போட்டிகளில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்து, பிரதமர் மன்மோகன் சிங் அருகில் நாற்காலியை போட்டு அமர வைத்திருக்கின்றனர். இது மன்னிக்க முடியாத செயல். இந்திய அரசை தமிழக மக்களும், இலங்கை தமிழர்களும் மன்னிக்கவே மாட்டார்கள் என்றார்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to ராஜபக்சேவுக்கு கவுரம் அளிப்பதா? வைகோ