Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டி, இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் முன்னெடுத்த கையெழுத்து இயக்க போராட்டம் திட்டமிட்டபடி செவ்வாய்க்கிழமை இன்று மாலை நான்கு மணிக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்தேறியது.

பொது இடத்தில் நடத்துவதற்கான அனுமதியை காவல்துறையிடம் கேட்கப்பட்டது. அதற்கு சென்னை காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. எனவே சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடத்துவது என்று முடிவானது. அந்த இடத்திற்கும் காவல்துறையினர் வந்து தடுப்பார்களோ என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அப்படி ஏதும் நடக்கவில்லை.

மாலை நான்கு மணிக்கு 50 மீட்டர் துணி பதாகை வளாகத்திற்குள் கட்டப்பட்டது. அப்போது பெரும் திரளான கூட்டம் வரத் தொடங்கியது.

சட்டக் கல்லூரி மாணவர்கள் , நூற்றுக் கணக்கான வழக்கறிஞர்கள் என்று குவியத் தொடங்கினார்கள்.

தமிழ் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த பெரியவர் பத்மநாபன், சி.. பச்சியப்பன், கவிஞர் புலமைப்பித்தன். பெரியார் திராவிடர் கழகத்தில் இருந்து விடுதலை ராஜேந்திரன், அமைப்பின் மாவட்ட நிர்வாகிகள், பேராசிரியை சரஸ்வதி, தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தில் இருந்து தோழர் தியாகு, கவிஞர் தாமரை, கவிஞர் அறிவுமதி ஆகியோர் இயக்க கூட்டத்தினரோடு வந்திருந்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், செய்தி தொடர்பாளர் வன்னி அரசு, மாவட்ட தலைவர் கபிலன்

நாம் தமிழர் கட்சியில் இருந்து தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது, மாவட்ட தலைவர் அதியமான், மதிமுக கட்சியில் இருந்து நிர்வாகிகள் மனோகரன், மணிமாறன், தீரன், தமிழக பெண்கள் இணைப்புக் குழு தலைவி ஹீலு, தமிழக பெண்கள் செயல் இயக்க களம் தலைவியும், பெருஞ்சித்திரனாரின் பேத்தியுமான இசைமொழி, மனித உரிமை ஆர்வலர் டி.எஸ்.எஸ் மணி ஆகியோர் கூட்டம் கூட்டமாக வந்திருந்தனர்.

இவர்களை தவிர தமிழர் களம், மே 17 இயக்கம் திருக்குமரன் ,புரட்சிகர இளைஞர் முன்னணி, அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கம், அகில இந்திய பாரம்பரிய மீனவ்ரகள் சங்கம், மீனவர்கள் முன்னேற்ற சங்கம், மீனவர்கள் முன்னேற்ற கழகம், தமிழ் உரிமை கூட்டமைப்பு உள்ளிட்ட இன்னும் ஏராளமான இயக்கத்தினர் பெருந்திரளாக வந்து கலந்துகொண்டு விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று கையெழுத்திட்டனர்.

புலவர் புலமைப்பித்தன் விடுதலை புலிகள் மீதான தடை, தமிழர்கள் மீதான தடை . இந்திய அரசே தடையை நீக்க என்றெழுதி கையொப்பமிட்டார்.

கவிஞர் தாமரை பேசும் போது 1993-ம் ஆண்டு செல்வி ஜெயலலிதா முதல்வராக இருந்த போது தடையை மேலும் நீடிப்பதாக அறிவித்தார். அப்போது திமுக எதிர்க்கட்சி. அதன் சார்பாக பரிதி இளம்வழுதி மட்டும் ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அப்போது தமிழக சட்டமன்றத்தில் இந்தப் பிரச்சனையை கொண்டு வந்த திமுக-வின் சட்டமன்ற உறுப்பினர் பரிதி இளம்வழுதி இந்தியாவில் இல்லாத விடுதலை புலிகள் இயக்கத்தை ஏன் தடை செய்ய வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். அந்த திமுக-தான் இப்போது ஆளும் கட்சியாக இருந்துகொண்டு மத்திய அரசின் தாளத்திற்கு ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டார்.

தடைகளை தாண்டி இந்த கையெழுத்து இயக்கம் பெரும் திரளான மக்கள் ஆதரவோடு வெற்றிபெற்றது. முடிவில் இந்த துணி பதாகையை தமிழக ஆளுனரிடம் அளிப்பதா, அல்லது தீர்ப்பாயத்திடம் கொடுப்பதா என்று மற்ற ஆதரவு இயக்க தலைவர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்று இய்க்குனர புகழேந்தி தங்கராஜ் தெரிவித்தார். தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டி, இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் முன்னெடுத்த கையெழுத்து இயக்க போராட்டம் திட்டமிட்டபடி செவ்வாய்க்கிழமை இன்று மாலை நான்கு மணிக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்தேறியது.

பொது இடத்தில் நடத்துவதற்கான அனுமதியை காவல்துறையிடம் கேட்கப்பட்டது. அதற்கு சென்னை காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. எனவே சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடத்துவது என்று முடிவானது. அந்த இடத்திற்கும் காவல்துறையினர் வந்து தடுப்பார்களோ என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அப்படி ஏதும் நடக்கவில்லை.

மாலை நான்கு மணிக்கு 50 மீட்டர் துணி பதாகை வளாகத்திற்குள் கட்டப்பட்டது. அப்போது பெரும் திரளான கூட்டம் வரத் தொடங்கியது.

சட்டக் கல்லூரி மாணவர்கள் , நூற்றுக் கணக்கான வழக்கறிஞர்கள் என்று குவியத் தொடங்கினார்கள்.

தமிழ் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த பெரியவர் பத்மநாபன், சி.. பச்சியப்பன், கவிஞர் புலமைப்பித்தன். பெரியார் திராவிடர் கழகத்தில் இருந்து விடுதலை ராஜேந்திரன், அமைப்பின் மாவட்ட நிர்வாகிகள், பேராசிரியை சரஸ்வதி, தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தில் இருந்து தோழர் தியாகு, கவிஞர் தாமரை, கவிஞர் அறிவுமதி ஆகியோர் இயக்க கூட்டத்தினரோடு வந்திருந்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், செய்தி தொடர்பாளர் வன்னி அரசு, மாவட்ட தலைவர் கபிலன்

நாம் தமிழர் கட்சியில் இருந்து தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது, மாவட்ட தலைவர் அதியமான், மதிமுக கட்சியில் இருந்து நிர்வாகிகள் மனோகரன், மணிமாறன், தீரன், தமிழக பெண்கள் இணைப்புக் குழு தலைவி ஹீலு, தமிழக பெண்கள் செயல் இயக்க களம் தலைவியும், பெருஞ்சித்திரனாரின் பேத்தியுமான இசைமொழி, மனித உரிமை ஆர்வலர் டி.எஸ்.எஸ் மணி ஆகியோர் கூட்டம் கூட்டமாக வந்திருந்தனர்.

இவர்களை தவிர தமிழர் களம், மே 17 இயக்கம் திருக்குமரன் ,புரட்சிகர இளைஞர் முன்னணி, அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கம், அகில இந்திய பாரம்பரிய மீனவ்ரகள் சங்கம், மீனவர்கள் முன்னேற்ற சங்கம், மீனவர்கள் முன்னேற்ற கழகம், தமிழ் உரிமை கூட்டமைப்பு உள்ளிட்ட இன்னும் ஏராளமான இயக்கத்தினர் பெருந்திரளாக வந்து கலந்துகொண்டு விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று கையெழுத்திட்டனர்.

புலவர் புலமைப்பித்தன் விடுதலை புலிகள் மீதான தடை, தமிழர்கள் மீதான தடை . இந்திய அரசே தடையை நீக்க என்றெழுதி கையொப்பமிட்டார்.

கவிஞர் தாமரை பேசும் போது 1993-ம் ஆண்டு செல்வி ஜெயலலிதா முதல்வராக இருந்த போது தடையை மேலும் நீடிப்பதாக அறிவித்தார். அப்போது திமுக எதிர்க்கட்சி. அதன் சார்பாக பரிதி இளம்வழுதி மட்டும் ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அப்போது தமிழக சட்டமன்றத்தில் இந்தப் பிரச்சனையை கொண்டு வந்த திமுக-வின் சட்டமன்ற உறுப்பினர் பரிதி இளம்வழுதி இந்தியாவில் இல்லாத விடுதலை புலிகள் இயக்கத்தை ஏன் தடை செய்ய வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். அந்த திமுக-தான் இப்போது ஆளும் கட்சியாக இருந்துகொண்டு மத்திய அரசின் தாளத்திற்கு ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டார்.

தடைகளை தாண்டி இந்த கையெழுத்து இயக்கம் பெரும் திரளான மக்கள் ஆதரவோடு வெற்றிபெற்றது. முடிவில் இந்த துணி பதாகையை தமிழக ஆளுனரிடம் அளிப்பதா, அல்லது தீர்ப்பாயத்திடம் கொடுப்பதா என்று மற்ற ஆதரவு இயக்க தலைவர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்று இய்க்குனர புகழேந்தி தங்கராஜ் தெரிவித்தார்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

1 Response to தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டி, சென்னையில் நடைபெற்ற கையெழுத்து இயக்க போராட்டம் (படங்கள் இணைப்பு)

  1. பார்த்திபன், தமிழ்நாடு‍

    எனக்கும் கையெழுத்து‍ இட ஆசை, விருப்பம் தான், இந்த செய்தியை இன்று‍ காலை தான் செய்தி தாளில் படித்து‍ அறிந்தேன். இந்த போன்ற நிகழ்வுகளை, முன்னரே செய்தி தாள்/இணைத்தின் மூலமாக ஏற்பாட்டாளர்கள் தெரிவி்த்தால், அதிக அளவில் தமிழ் உணர்வாளர்கள் கலந்து‍ கொள்ள நேரிடும். இந்த மாதம் 28 ஆம் தேதி நடக்க இருக்கம் மத்திய தீர்பாயத்திற்க்கு‍ அதிக அளவிலான நபர்கள் தந்திகளை (விடுதலை புலிகளின் மீது‍ உள்ள தடையை நீக்குமாறு) அனுப்பும் விதமாக தடைளை நீக்க தீவிரமாக போராடும் அமைப்புக்கள், இதற்கு‍ ஏற்பாடு‍ செய்தால் நல்லது. மத்திய தீர்பாயத்திற்க்கு, எந்த விலாசத்துக்கு தந்தி அனுப்ப வேண்டும் என்பதை தெரிவித்தால் நல்லது.‍

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com