2009-ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரான போரில் ஒரு இலட்சம் ஈழத்தமிழர்களை கொன்று குவித்த சிங்கள இனவெறியன் இராஜபக்சேவும் அவரைச் சார்ந்தவர்களும் ஐ.நா.மன்றம் மூலம் மர்டுகி தருஷ்மன் தலைமையில் போர்க்குற்றவாளியாக விசாரிக்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் வட அயர்லாந்து டப்ளின் மக்கள் தீர்ப்பாயம் 2010சனவரியில் மேற்கொண்டவிசாரணை மூலம் 20க்கும் மேற்பட்ட ஆதாரங்களை காட்டி இலங்கை அதிபர் இராஜபக்சே ,இராணுவ அமைச்சர் கோத்தபய இராஜபக்சே உள்ளிட்டோர் மீது ஐ.நா மன்றம் விசாரணை நடத்த வேண்டுமென பரிந்துரை செய்துள்ளது.
அது மட்டுமின்றி நார்வே,சுவிட்சர்லாந்து,இத்தாலி,பிரான்ஸ்,ஆகிய நாடுகளில் வாழும் புலம் பெயர் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கான ஆதாரங்களை திரட்டி அந்தந்த நாட்டு நீதிமன்றங்களில் இராஜபக்சேவுக்கு எதிராகப் போர்குற்ற வழக்குகள் தொடுத்து வருகின்றனர். அமெரிக்காவில் உள்ள 'இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் என்னும் அமைப்பு 12,000க்கும் மேற்பட்ட மனித உரிமை மீறல்கள் போர்குற்ற ஆதாரங்களை தொகுத்து அமெரிக்கா செனட் அவையிடம் தந்து இராஜபக்சே மீது போர்குற்ற விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள உலகின் போற்குற்றங்களைப்பற்றி ஆய்வு மேற்கொள்ளும் [dream for darfar] என்கிற தொண்டு நிறுவனம் உலகில் இனப்படுகொலை நடைபெற்ற 8 நாடுகளில் இலங்கை முதலிடத்தில் இருப்பதை அம்பலப்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துவது போல் பொதுநலவாய விளையாட்டு போட்டி நிறைவு விழாவில் ராஜபக்சேவை சிறப்பு விருந்தினராக அழைக்கும் இந்தியாவின் செயல் கண்டிக்கத்தக்கதாகும். உலகமே போர்குற்றவாளியாக பார்க்கும் இலங்கையை பாதுகாக்க இந்தியா தொடர்ந்து துணைபோய் கொண்டிருப்பது இந்தியாவில் வாழும் ஏழரை கோடி தமிழ் மக்களை மட்டுமல்லாமல் உலகெங்கும் வாழும் தமிழர்களையும் கொதிப்படைய செய்துள்ளது.
அண்மையில் ராஜபக்சே அமெரிக்கா சென்றிருந்தபோது நியூயார்க் நகரில் அளித்த விருந்தை சர்வதேச நாடுகள் அனைத்தும் புறக்கணித்து எதிர்ப்பை வெளிப்படுத்தியது. ஆனால் ஐநூறுக்கும் மேற்ப்பட்ட தமிழக (இந்திய?) மீனவர்களை கொன்றுபோட்ட போர்க்குற்றவாளி ராஜபக்சேவை காப்பாற்ற இந்தியா பொதுநலவாய விளையாட்டு போட்டியின் நிறைவு விழாவிற்கு ரத்தின கம்பள வரவேற்ப்பு அளிக்கிறது. இந்த தமிழின விரோதபோக்கை நாம் தமிழர் கட்சி மிக வண்மையாக கண்டிக்கிறது. இலங்கை அதிபர் ராஜபக்சே பங்குபெறும் நிறைவு விழாவை தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து தமிழக நடுவண் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் புறக்கணிக்குமாறு நாம் தமிழர் கட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to காமன்வெல்த் விளையாட்டு போட்டி நிறைவு விழாவிற்கு கொடுங்கோலன் ராஜபக்சே வருகை: நாம் தமிழர் கட்சி கடும் கண்டனம்