இம்மாநாடு எதிர்வரும் 24.10.2010 அன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள wisma tun sambantha soma மண்டப்பத்தில் காலை 10;00 மணி தொடக்கம் 2;00மணிவரை நடைபெறவுள்ளது.
பலவருடங்களாக 3900ற்கும் அதிகமான ஈழத்தமிழர்கள் அகதிகளாக மலேசியாவிலே வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுக்கு UNHCR இன் அகதி அட்டை மட்டுமே வழங்கப்பட்டுள்ளதே தவிர வேறு எந்த ஒரு வாழ்வாதரத்திற்கும் தேவையான அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை. குறிப்பாக, முறையான வேலை அனுமதியே, தங்குமிடம் மற்றும் உணவு, கல்வி வசதியோ செய்து கொடுக்கப்படவில்லை. மனிதாபிமான அடிப்படையில் மலேசிய அரசாங்கத்தால் தற்காலிகமாக தங்க அனுமதிக்கப்பட்டிருக்கும் அகதிகளை மூன்றாம் குடியேற்ற நாடுகளில் குடியமர்த்த யாரும் முனைப்புக் காட்டவில்லை.
ஆகவே, ஈழத்தமிழர்களின் துயர்துடைந்து அவர்களின் சுதந்திர வாழ்வை உறுதிப்படுத்தும் நோக்கோடே இம்மாநாடு முதல்முறையாக நடத்தப்படுகிறது. இதனை 75 ஈழ அகதிகளின் விடுதலைக்குப் பாடுபட்டு வெளிக்கொணர்ந்து மூன்றாம் தரப்பு நாடுகளில் குடியமர்ந்த வெற்றிகரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் மாற்றுச்செயலணியின் தலைவர் திரு.கலைவாணர் அவர்களே முழுப்பொறுப்பையும் ஏற்று நடாத்துகின்றார்.
இம்மாநாட்டின் மூலம்,
01) இங்குள்ள ஈழ அகதிகளை குடியேற்றநாடுகளில் விரைவாக குடியமர்ந்த மலேசியா அரசும், ஐக்கிய நாடுகள் அகதிகள் அமைப்பும் விரைந்து செயலாற்றவேண்டும்.
02) தற்காலிகமாக தங்கியிருக்கும் ஈழ அகதிகளுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கத்தோடு மலேசிய சட்டத்திற்கு உட்பட்டு முறையான வேலை அனுமதியும் தங்குமிடம், கல்வி போன்றவை வழங்க முன்வரவேண்டும்.
03) ஈழ அகதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும்.
இதன் மூலம் இங்குள்ள ஈழ அகதிகளின் சுதந்திர வாழ்வை உறுதிப்படுத்த முடியும் என்பதற்காகவே இம்மாநாடு நடாத்தப்படுகிறது. இம்மாநாட்டில் மலேசிய அரசின் மத்திய அமைச்சர்கள் இருவர் கலந்துகொண்டு இம்மாநாட்டினை சிறப்பிக்க உள்ளார்கள்.
மேலும், மலேசியாவின் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளும் காவல்துறை உயர்அதிகாரிகளும் கலந்துகொள்ள உள்ளார்கள், மேலும் மலேசிய மனிதஉரிமை அமைப்பும், UNHCR அதிகாரிகளும், ஐ.நா அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளார்கள். நோர்வே, அவுஸ்ரேலியா நாட்டு தூதரக அதிகாரிகளும் கலந்துகொள்ள உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவுஸ்ரேலியா, கனடா, அமெரிக்கா, நோர்வே, பிரித்தானியா, இந்தியா போன்ற நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்கள்.
இங்குள்ள ஈழ அகதிகளின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்த போகும் இம்மாநாட்டிற்கு தவறாமல் மலேசியாவில் வாழும் அனைத்து ஈழ அகதிகளும் கலந்துகொண்டு தங்களது சுதந்திர வாழ்வை உறுதிப்படுத்த முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் ஈழ அகதிகளின் இன்னல்போக்கும் மாநாட்டிற்கு உலகெல்லாம் வாழும் தமிழர்களும், குறிப்பாக மலேசிய தொப்பிள்கொடி உறவுகளும் பேராதரவுகொடுக்க வேண்டும் என வேண்டிநிற்கின்றோம்.
நன்றி
ஈழ அகதிகள் மாநாட்டு ஏற்பாட்டுக்குழு,
மாற்றுச்செயலணி,
மலேசியா.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to மலேசியாவில் ஈழத்தமிழ் அகதிகளின் மாபெரும் மாநாடு