Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பிரித்தானியாவிற்குப் பயணம் மேற்கொண்டிருந்தபோது அவரது பயணத்திற்கும், சிறீலங்கா அரசின் பரப்புரை இயந்திரத்திற்கும் ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் ஒன்று திரண்டு தமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.

பிரித்தானிய தமிழர் பேரவை விடுத்த அழைப்பிற்கு இணங்க லண்டனிலுள்ள ஏனைய தமிழ் அமைப்புக்களும் இணைந்து குறுகிய காலத்தில் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை ஏற்பாடு செய்திருந்த நிலையில், வேலை நாளாக இருந்தும் கடும் குளிர், மழையின் மத்தியில் மக்கள் ஆயிரக் கணக்கில் திரண்டு தமது எதிர்ப்பைத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்துகொண்ட மக்களிற்கும், ஒழுங்கமைப்பில் இணைந்து பணியாற்றிய ஏனைய தமிழ் அமைப்புக்களிற்கும், ஊடகங்களிற்கும் பிரித்தானிய தமிழர் பேரவை தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றது.

International Institute for Strategic Studies (IISS) என்ற அமைப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) லண்டனில் நடத்திய மாநாட்டில் சிறப்புரை ஆற்றுவதற்காக பீரிஸ் பிரித்தானியா வந்திருந்தார். பயங்கரவாதத்தை முறியடித்தல், நாடுகடந்த பயகரவாத முன்னணி அமைப்புக்கள், இலங்கையில் இனப் பிரச்சினைக்குப் பின்னரான அபிவிருத்திச் செயற்பாடுகள், மற்றும் இலங்கைபிரித்தானிய உறவு போன்ற விடயங்கள் இந்த மாநாட்டில் ஆராயப்பட்டிருந்தன.

பீரிஸ் மாநாட்டில் கலந்து கொண்டிருந்த ஏக காலத்தில் மாநாட்டு மண்டபத்திற்கு வெளியே திரண்ட தமிழ் மக்கள், சிறீலங்கா அரசின் தமிழ் மக்கள் மீதான இனப் படுகொலையை தெளிவுபடுத்தும் பதாகைகள், நிழற்படங்களைத் தாங்கியவாறு, அனைத்துலக சுயாதீன போர்க் குற்ற விசாரணையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியிருந்தனர். அத்துடன், துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினர்.

பீரிஸ் தனது அரசுக்கான பரப்பரையில் ஈடுபட்டிருந்தபோது நண்பகல் 12:00 மணி முதல் பிற்பகல் 3:30 மணிவரை தமிழ் மக்கள் அணி திரண்டு தமது எதிர்ப்பைத் தெரிவித்தமை, மற்றும் இறுதிப் போரின்போது கொல்லப்பட்டவர்கள் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ள நிழற்படங்கள் என்பவற்றை அவதானித்த வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர், சிறீலங்கா அரசின் உண்மைத் தன்மை பற்றிய கேள்வி எழுவதாகச் சுட்டிக்காட்டினார்.

போர்க் குற்றங்களை எடுத்துக்காட்டும் வகையிலான, இறுதிப் போரில் கொல்லப்பட்டவர்களில் மேலும் சிலரின் நிழற்படங்களை கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரித்தானிய ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to லண்டனில் பீரிஸிற்கு எதிரான போராட்டம் : தமிழர் பேரவை நன்றி தெரிவிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com