Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்கா, கலிபோர்னியாவின் Los angeles பகுதியில் சரத் பொன்சேகாவை விடுவிக்கக் கோரியும், பதினெட்டாம் சீர்திருத்தம் மூலம் சீரழிக்கப்பட்ட ஜனநாயகத்தை பாதுகாக்கவும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

இவ் ஆர்ப்பாட்டம் நேற்று (22.10.2010) வெள்ளிக்கிழமை மாலை நான்கு மணி முதல் ஆறு மணி வரை இலங்கை தூதரகம் முன்பாக நடைபெற்றது.

இவ் ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ரோசி சேனநாயக்க கலந்து கொண்டு இறுதியில் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

இதில் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்கள் 70 பேர் அளவில் கலந்து கொண்டார்கள்.

இலங்கை தூதரகத்தில் இருந்து இத்தகைய ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டாம் என தொலைபேசி மூலம் அழைப்பு வந்த போதும் அது புறக்கணிக்கபட்டது.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் சில ஆதரவாளர்களும் (கட்சி பிரதிநிதித்துவம் இன்மையால்) இவ் ஆர்பாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் "மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப சர்வாதிகாரத்தை ஒழிக்கவும்", "சிறையில் இருக்கும் போர் வீரனை விடுவிக்கவும்" எனும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் தமிழர்கள் எவரும் பங்குபற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to லொஸ்எஞ்சல்ஸில் பொன்சேகாவை விடுவிக்க கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com