பெண்ணவள் சின்னவள் அல்லடா? பூமிக்குக்கிடைத்த புஸ்பமடா
முற்றத்து மல்லிகயாய் புன்னகை பூத்திருந்த தமிழ்மாதுவை
கொற்றத்து முல்லைபோல் ஒதுக்கி வைத்தவன் யாரடா யார்??
ஆற்றங்கரையும் அடுப்பங்கரையும்தான் அவள் உலகம்
அம்மிக்கல்லும் ஆட்டுக்கல்லும்தான் அவளுடமை போலும்
எண்ணி இறுமார்ந்த மடையரடா சிலர்
அமைதிக்காய் வந்த காந்தி தாத்தாவின் வாரிசுகள் வல்லமை
கொண்ட தமிழ்மகளின் மானத்தை சூறையாடி சுடுகாடு வரை
கூட்டிச்செண்றதடா
தெண்றலாய் இருந்த மாலதி எண்ற மானமுள்ள தீ புயலாய் மாறி
எதிரியை சுட்டெரிக்க புறப்பட்டவள் இவள் பெண்ணல்லடா
பொண்னினத்தின் பெருமயடா
இவள் வருகயை காந்திமாகான் கண்டிருந்தால்கைகூப்பி நிண்றிருப்பார்
கண்ணகி இருந்திருந்தால் கால் சிலம்பு கொடுத்திருப்பாள்
காந்தியின் வாரிசுகள் கதிகலங்கி நிண்றதடா
மாவீரர் உறங்கும் கோப்பாய் மண்ணில்ஊருறங்கும் நேரம்
சீருடைதரித்த சீக்கிய போய்களின் உயிர்குடித உத்தமியடா மாலதி
மானமுள்ள மங்கையவள் மங்கையருள் மானிக்கமாய் ஒலிரும்
விடுதலை சுடரடா மாலதி
பொண்ணினத்தின் வீரியத்தை பெருக்கிவைத்தவள் மாலதி
மானத்தின் மகள் இவள் உறங்கும் மண்ணில்
தடக்கி விழும் குழந்தை கூட தாய் மண்ணை முத்தமிட்டு
தழுவும் இவள் கால்களின் சுவடு கண்டு
சங்கிலியன்.
“பெண்ணினத்தின் வீரம்” காணொளியைக்காண இங்கே அழுத்தவும்.



0 Responses to பெண்ணினத்தின் பெருமை மாலதி: கவிதை வடிவம் சங்கிலியன்