ஒன்றியத்தின் தலைவர் கலாநிதி தெஓ பென் குரிரப் தலைமையில் ஆரம்பமான இக்கூட்டத்தொடரில் 25 சபாநாயகர்கள், 155 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 488 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நேற்றைய கூட்ட ஆரம்பத்தில் பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட அழிவுகளை மீளக்கட்டி எழுப்புவதற்கான அவசரகாலத்திட்டம் ஒன்றை ஐக்கிய அரபு இராச்சியம், ஈரான் ஆகிய நாடுகள் முன்வைத்தன.
சுனாமியின் போது ஏற்பட்ட அழிவுகளை ஒத்ததாக மிகப்பெரிய அவலத்தை பாகிஸ்தான் சந்தித்திருப்பதாகவும் இதிலிருந்து அந்த மக்களை மீட்டெடுப்பதற்கு உலக நாடுகள் உதவ வேண்டும் என இக்கூட்டத்தில் கலந்து கொண்ட இஸ்லாமிய நாடுகளின் பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற மனித உரிமைகள் தொடர்பான அமர்வில் இலங்கையிலிருந்து எதிர்க்கட்சிகளின் சார்பில் கலந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தனா நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா அரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டமைக்காக அரசியல் ரீதியில் பழிவாங்கப்படுவதாக சுட்டிக்காட்டினார். அத்துடன், இலங்கையில் தொடர்ச்சியாக மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதாகவும் ஜயலத் ஜயவர்தனா சுட்டிக்காட்டினார்.
இதற்கு ஸ்ரீலங்கா அரசுத்தரப்பில் பதிலளித்த அமைச்சர் மகிந்த சமரசிங்க, இலங்கையின் சட்டவரம்பிற்கு உட்பட்டே சரத் பொன்சேகா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், அரசியலுக்கும் அவர் மீது மேற்கொள்ளப்பட்டிருக்கும் சட்ட நடவடிக்கைகளுக்கும் தொடர்பு இல்லை எனவும் தெரிவித்தார்.
இக்கூட்டத்தொடரில் மனித உரிமைகளைப் பேணுதல், தேர்தல் வன்முறைகளைத் தடுத்தல், தேர்தல் கண்காணிப்பை மேம்படுத்துதல், பொறுப்புள்ள அரசியல் மாற்றங்களுக்கான வழிவகைகள், ஆகிய விடயங்கள் தனித்தனியான குழு அமர்வுகளில் ஆராயப்படுகிறது.
இக்கூட்டத்தொடர் நாளை புதன்கிழமை வரை நடைபெறவுள்ளது.



0 Responses to இலங்கையின் மனித உரிமை மீறல்கள் அனைத்துலக பாராளுமன்ற கூட்டத்தொடரில்!