Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஒரு யுத்த வீரர் இன்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இதனால் மகிந்த அரசாங்கம் மாபெரும் துரோகமிழைத்திருக்கிறது. நியாயத்துக்காகப் போராடும் எமக்கும் காலம் வரும். அப்போது நாமும் பதிலடி கொடுப்போம் என மக்கள் விடுதலை முன்னணித் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுவிக்கக் கோரி கையொப்பம் திரட்டும் ஆரம்ப நிகழ்வு இன்று முற்பகல் கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

"அராஜக அரசியல் நடத்துவோரின் ஆட்சிக்காலம் தொடர்ந்ததாக சரித்திரம் இல்லை. விரைவில் மக்களுக்கான எமது ஆட்சி மலரும். அதன்பின்னர் நாட்டு மக்கள் சுதந்திரமாக வாழலாம்" என அவர் அங்கு மேலும் தெரிவித்தார்.

0 Responses to மகிந்த அரசாங்கம் மாபெரும் துரோகமிழைத்திருக்கிறது: சோமவன்ச அமரசிங்க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com