இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
பொன்சேகாவின் சிறுநீரகம் பாதிப்படைந்துள்ளதால் அவர் கட்டிலில் படுத்து உறங்கவேண்டிய நிலையில் உள்ளார். அவர் தரையில் படுப்பதால் நோய் தீவிரமடைந்து மரணத்தை தழுவும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளது என பொன்சேகாவுக்கு சிகிச்சை வழங்கும் வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.
பொன்சேகாவுக்கு கட்டில் ஒன்றை பெற்றுக்கொடுக்க உதவுமாறு தென்னிலங்கையின் பௌத்த பீடத்தை சேர்ந்த பிரதம மதகுரு ஒருவரிடம் வைத்தியர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஆனால் சிறீலங்காவின் வரலாற்றில் மகிந்தாவை போன்ற ஒரு சர்வாதிகாரியை தான் காணவில்லை என துறவி பதிலளித்துள்ளார்.
யார் சொல்வதையும் மகிந்தா கேட்கமாட்டார், நாம் பல தடவைகள் அறிக்கைகள் விடுத்தும் பலன் எதுவும் ஏற்படவில்லை. மேலும் ஒருமுறை வேண்டுகோள் விடுக்க திட்டமிட்டுள்ளேன், ஆனால் அவர் அதனை கேட்பார் என்பதை நாம் எதிர்பார்க்க முடியாது என துறவி மேலும் தெரிவித்துள்ளார்.
தனது பெயரை வெளியிட்டால் தான் மகிந்தாவால் கொல்லப்படலாம் என துறவி அச்சமடைந்ததால் அவரின் பெயரை ஊடகங்கள் வெளியிடவில்லை.



0 Responses to தரையில் படுத்து உறங்கும் பொன்சேகா விரைவில் மரணமடையலாம்?