சர்ச்சைக்குரிய வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைகள் நடைபெற்றுவரும் இந்நிலையில், முறைப்பாட்டுத் தரப்பின் பிரதான சாட்சியாளரான சண்டே லீடர் ஆசிரியர் பெட்ரிகா ஜான்ஸைக் கொலை செய்துவிட்டு அதனை சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்கள் மீது சுமத்தும் திட்டமொன்று இடம்பெற்று வருவதாக அரசாங்கப் புலனாய்வுப் பிரிவுடன் தொடர்புடைய நம்பிக்கைக்குரிய தகவல்கள் மூலம் அறியக் கிடைத்துள்ளதாக சிறிலங்கா கார்டியன் இணையத்தளம் தெரிவித்துள்ளது.வெள்ளை கொடி விவகாரம் தொடர்பான வழக்கில் நேற்று (06) இரண்டாவது தடவையாகவும் பெட்ரிகா ஜான்ஸ் சாட்சியமளித்திருந்தார் . சரத் பொன்சேகாவுடன் நடத்திய நேர்காணலுக்காகப் பயன்படுத்தி குறிப்புப் புத்தகத்தில் பக்கங்கள் புலனாய்வுப் பிரிவினரால் கிழிக்கப்பட்டிருப்பதாகவும், இவ்வாறான குறிப்புப் புத்தகத்தைத் தான் அதிகாரிகளுக்கு வழங்கவில்லை எனவும் சண்டே லீடர் ஆசிரியர் நீதிமன்றத்தில் கூறியதை
அடுத்து அரச தரப்பான முறைப்பாட்டுத் தரப்பின் சாட்சியங்களில் பாரிய சிக்கல் நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன.
மேலும், அரசாங்கத்தினால் மேற்படி விடயத்தை மீறி அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியதுடன் அதனை ஏற்றுக்கொள்ளப்பட்ட சாட்சியங்களினால் மாத்திரமே உறுதிப்படுத்த முடியும். அரசாங்கம் அதனை உறுதிப்படுத்தத் தவறும் பட்சத்தில் பெட்ரிக்கா ஜான்ஸின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிட்டு தற்போது நிலவும் நிலைமையில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பது அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் இருக்கும் ஒருவரின் நிலைப்பாடாக இருப்பதாகவும் தெரியவருகிறது.
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க ஆயுதக் குழுவொன்றினால் கொலை செய்யப்பட்டதாகவும் அந்தக் கொலையை ஜெனரல் சரத் பொன்சேகாவே செய்ததற்கான சாட்சியங்கள் தன்னிடம் இருப்பதாக பிரதியமைச்சர் மேர்வின் சில்வா பகிரங்கமாக கூறியிருந்தார்
எவ்வாறாயினும், இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் விமல் வீரவங்ச துள்ளிக்குதித்து மேற்கொண்ட உண்ணாவிரதத்திற்கு தடை ஏற்படுத்திய காவல்துறை அதிகாரிகளை ஐக்கிய தேசியக் கட்சியிடம் லஞ்சம் பெற்றவர்கள் எனக் கூறப்பட்டது. இதற்கு சாட்சியங்களும் இருப்பதாகவும் குறித்த அமைச்சர் கூறினார் எனினும், விமல் வீரவங்சவின் உடலின் எடை மூன்று கிலோவினால் குறைந்தது மாத்திரமே நிகழ்ந்தது என அந்த அமைச்சர் கூறியதாக லங்கா கார்டியன் இணையத்தளம் தெரிவித்துள்ளது.



0 Responses to சண்டே லீடர் பிரதம ஆசிரியரைக் கொலை செய்து பழியை பொன்சேகா மீது சுமத்த சதித் திட்டம்