கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் 128 குடும்பங்களைச் சேர்ந்த 815 பேர் சன்னார் கிராமத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.
எனினும் இவர்களுக்கு தற்காலிகமாக வீடு அமைப்பதற்கு தரப்பால் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மர நிழலின் கீழ் அம் மக்கள் தரப்பாளினால் குடிசைகளை அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது பெய்து வரும் மழை காரணமாக அவர்களின் குடிசைகளைச் சுற்றி மழை நீர் தேங்கி நிற்கிறது. பல குடிசைகளுக்குள்ளும் மழை வெள்ளம் புகுந்துள்ளது.
இதனால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். மழை நீர் தேக்கத்தால் மலேரியா டெங்கு போன்ற தோற்று நோய்களும் பரவ வாய்ப்புள்ளதாக அம்மக்கள் அஞ்சுகின்றனர்.
எனவே அதிகாரிகள் இம் அம்க்களின் மீது கவனம் செலுத்துமாறு கிராம அபிவிருத்தச் சங்கத் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to மன்னார் - மாந்தையில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் குடிசைகளுக்குள் மழை வெள்ளம்! (காணொளி இணைப்பு)