Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பொன்சேகாவை மீட்டெப்பதற்காக ஜனநாய தேசிய கூட்டமைப்பு புதிய அமைப்பொன்றை உருவாக்கி உள்ளது. ஜனநாயக மக்கள் இயக்கம் என பெயரிடப்பட்டுள்ள இந்த குழுவில் ஜே வீ பி பிக்குகள், மற்றும் சமூக சேவைகள் அமைப்பு என்பன உள்ளடங்குகின்றன.

இது தவிர இந்த அமைப்பில் இணைந்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளிடம் இருந்து நாட்டை மீட்டெடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவிற்கு அரசாங்கம் இன்று வழங்கி உள்ள மரியாதை சாலசிறந்தது என்று ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

அரசின் சர்வாதிகார நடவடிக்கைகள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்த அவர் இதற்காக இனம் மத பேதம் இன்றி ஒன்றினையுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டு மக்களுக்காக பாடுப்பட்ட ஒருவர் இவ்வாறு துன்புறுத்தலுக்கு உள்ளவது எந்தவகையிலும் ஏற்று கொள்ள முடியாது. அதற்கு தேச மக்கள் ஒரு போதும் இடமளிக்கவும் கூடாது. ஜனநாயக போராட்டங்கள் முடக்கப்படுகின்றன.

பொன்சேகாவை விடுவிக்க கோரி ஒட்டப்படுகின்ற சுவரொட்டிகள் கிழிக்கப்படுகின்றன. அதனை ஒட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மிரட்டப்படுகின்றனர். ஜனநாயகம் நீங்கி சர்வதிகாரம் தலை தூக்கி உள்ளது.

எனவே நாட்டை நேசிக்கும் மக்கள் யோசித்து தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார்.

0 Responses to பொன்சேகாவை மீட்டெப்பதற்காக ஜனநாயக மக்கள் இயக்கம்: புதிய அமைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com