மீனவர் சங்க தலைவர் மகேஷ் அவர்கள் பேசும்போது தமிழக மீனவர்களின் நலனுக்காக குரல் கொடுத்த செந்தமிழன் சீமான் அவர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார்.மேலும் சீமான் அவர்கள் பேசியதில் எந்த தவறும் இல்லை எனவும்,செந்தமிழன் சீமான் அவர்கள் பேசியது போலத்தான் தமிழக மீனவர்களின் மனநிலையும் தற்போது இருக்கிறது ,ஆகவே மீனவர்கள் அனைவரையும் கைது செய்ய அரசு தயாரா? என்று கேள்வி எழுப்பினார்.
பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்கள் பேசும்போது தமிழகத்தில்; வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் தோற்கடிக்கப்படும் என்று தெரிவித்தார்.தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்கள் பேசும்போது தமிழகத்தில் இருக்கும் திராவிட கட்சிகள் அனைத்தும் மக்களை ஏமாற்றி வருகிறது எனவும் எனவே தமிழர்களாகிய நாம் அனைவரும் நாம் தமிழர் கட்சியில் இணைய வேண்டும் என்று தெரிவித்தார்.
இறுதியாக முத்தழகி அவர்கள் நன்றியுரை வழங்க கூட்டம் இனிதே நிறைவடைந்தது.இப்பொதுக்கூட்டத்தில் ஏராளமான நாம் தமிழர் கட்சியினரும், பெருந்திரளான பொதுமக்களும் மற்றும் பெண்கள் அதிகளவில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to வட சென்னை மாவட்டத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் தமிழர் வாழ்வுரிமை பொதுக்கூட்டம் (படங்கள் இணைப்பு)