வெளிவரவிருக்கும் ‘Ghost Recon Predator’ கணணி விளையாட்டு ஈழத் தமிழர் படுகொலை காட்சிகளை கொண்டிருப்பதோடு, அவர்களது நியாயமான விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் அவர்களை பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டு காட்டப்படுவதை, ரொறொன்ரோ, கனடா தமிழ் இளையோர் அமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது.இவ் விளையாட்டானது தமிழர்களை கொடிய கொலைகாரர்களாகவும், பயங்கரவாதிகளாகவும் சித்தரித்து, அவர்களை கொல்வதை விளையாடும் இளையோர்களுக்கு இலக்காக வழங்குகி அவர்களுக்கு தப்பான கருத்தூட்டம் செய்கின்றது.
தமிழர் இனப் படுகொலையை நியாயப்படுத்தும் ‘Ghost Recon Predator’ என்கிற இவ் விளையாட்டை, இதன் படைப்பாளிகளான Ubisoft Red Storm Entertainment நிறுவனத்தை வெளியிட வேண்டாம் என எம்மக்கள் சார்பாக தமிழ் இளையோர் அமைப்பு கேட்டுக்கொள்கிறது.
இலங்கை அரசால் 1983களில் இருந்து ஈழத் தமிழர் கொடிய இனப்படுகொலைகளை சந்தித்து வருகின்றனர். தொடர்ந்து நடந்து வரும் இப்படுகொலைகள் 2009ல் முள்ளிவாய்க்காலில் உச்சக்கட்டத்தை அடைந்து இன்று ஐக்கிய நாடுசபையில் இலங்கைமீதான குற்றவியல் வழக்காக பதியப்பட்டுள்ளது.
இவ்வாறு கொடிய வதைக்குட்படுத்தப்பட்டுள்ள ஈழத் தமிழர்களை மேற்கொண்டு ‘Ghost Recon Predator’ என்கிற கணணி விளையாட்டின் மூலமாக கொடியவர்களாக சித்தரிப்பதன் மூலம் தமிழர்களின் மீது வெறுப்புணர்ச்சிகளை தூண்டிவிடுகின்றது Ubisoft Red Storm Entertainment நிறுவனம்.
இத்தோடு இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் இவ் விளையாட்டு கொடிய படுகொலைகளை மீண்டும் நினைவூட்டுவதாகவும் அவர்களை உளவியல் ரீதியாக பாதிப்பதாகவும் அமைந்துள்ளது.
இவ்விளையாட்டில் தமிழர்களை கொடிய கொலைகாரர்களாகவும், இதை விளையாடுபவர் அவர்களை கொன்றழிக்கவேண்டும் என்பதாகவும், துயரம் நிறைந்த தமிழர் படுகொலைகளை விளையாட்டுக் காட்சிகளாக காட்டுவதை அகற்றுமாறு தமிழ் இளையோர் அமைப்பு Ubisoft Red Storm Entertainment நிறுவனத்திடம் தமிழ் மக்களின் சார்பில் வேண்டி நிற்கின்றது.
அத்தோடு இளையோர் அமைப்பானது, இவ் நிறுவனத்தை தொடர்பு கொண்டு உங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களையும் புகார்களை தெரிவிக்குமாறும் அனைத்து தமிழர்களயும், முக்கியமாக உலகெங்கும் வாழ் தமிழ் இளையோர்களை உரிமையுடன் வேண்டிநிற்கின்றது.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to ஈழத் தமிழர்களை பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கும் ‘Ghost Recon Predator’ கணணி விளையாட்டிற்கு கனடா தமிழ் இளையோர் அமைப்பு கண்டனம்