Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிப்பது அல்லது விலக்குவது குறித்து தற்போது நடைபெற்றுவரும் விசாரணை அமர்வில் புலிகளின் தரப்பு நியாயங்களையும் எடுத்து வைக்க வாய்ப்பு தரவேண்டும் என இந்திய அரசுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி. ருத்திரகுமாரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் தமது வாதத்தை முன்வைப்பதற்கான சூழ்நிலையை உருவாக்கவேண்டுமென இந்திய அரசாங்கத்திடம் மரியாதையுடன் வேண்டிக் கொள்கிறோம்.

இந்தியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையினைப் புதுப்பிப்பது தொடர்பாக தற்போது நடைபெற்றுவரும் விசாரணை அமர்வானது தவறுகள் கொண்டதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த ஒரு நீதிசார் நடைமுறையிலும் இருதரப்பினரையும் கேட்கும் வாய்ப்பு என்பது இயல்பான நீதியோடும், நியாயத் தன்மையோடும் இணைந்த அம்சமாகும்.

எனவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களும் தமது வாதத்தை முன்வைப்பதற்கான சூழ்நிலையை உருவாக்கவேண்டுமென இந்திய அரசாங்கத்திடம் மரியாதையுடன் வேண்டிக் கொள்கிறோம்.

அத்தோடு எந்தத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரும் தமது வாதத்தை முன் வைக்க வரும் பட்சத்தில் அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படலாம் அல்லது சட்டத்துக்குப் புறம்பான தண்டனையை அனுபவிக்கலாம் என்பது பற்றிய அச்சம் முற்றாகத் தவிர்க்கப்படும் வகையில் இந்திய அரசாங்கம் தம்மால் இயன்ற அத்தனையையும் செய்ய வேண்டுமெனவும் உரத்துக் கூற விரும்புகின்றோம்

தேசங்களின் எல்லைகளைக் கடந்து உலகின் பல பாகங்களிலும் வாழும் ஈழத் தமிழ்ச் சமூகத்தினராகிய நாம் எமது சொந்த மண்ணில் நீதியோடிணைந்த விடுதலைக்காக மேற்கொண்டு வரும் போராட்டத்தின் இன்றைய முக்கியமான கட்டத்தில் இந்திய தேசத்திடமிருந்து நீதியையும் நேர்மையினையும் பெரிதும் எதிர்பார்க்கின்றோம்”, என்றார் ருத்திரகுமாரன்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

1 Response to விடுதலைப் புலிகள் பக்க நியாயங்களையும் கேளுங்கள்: வி. ருத்திரகுமாரன்

  1. பார்த்திபன் தமிழ்நாடு‍

    திரு‍ வி. ருத்திரகுமாரன் அவர்களுக்கு‍ எனது‍ நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள். இந்த செய்தியை படிக்கும் அணைத்து‍ வாசகர்களும், வருகின்ற 28 ஆம் தேதி சென்னையில் நடக்க இருக்கம் மத்திய தீர்பாயத்திற்க்கு‍ அதிக அளவிலான நபர்கள் தந்திகளை (விடுதலை புலிகளின் மீது‍ உள்ள தடையை நீக்குமாறு) அனுப்புவது‍ நல்லது‍. தந்திகளை அதிக நபர்கள் அனுப்பும் விதமாக தடைளை நீக்க தீவிரமாக போராடும் அமைப்புக்கள், இதற்கு‍ ஏற்பாடு‍ செய்தால் நல்லது. மத்திய தீர்பாயத்திற்க்கு, எந்த விலாசத்துக்கு தந்தி அனுப்ப வேண்டும் என்பதை தெரிவிப்பது‍ வசதியாக இருக்கும். டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரமஜித், மத்திய தீர்பாயம், சென்னை உயர் நீதிமன்றம், சென்னை 1 என்ற விலாசம் சரியாக இருக்குமா. மேலும், டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரமஜித் அவர்களின் மின்னஞ்‍சல் விலாசம் கிடைத்தால் அதிகமான தமிழர்கள், தடையை நீக்க வலியுறு‍த்தி மின்னஞ்‍சல் அனுப்பலாம். தயவு செய்து‍ தெரிவிக்கவும்.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com