இலங்கையில் வெளிவிகார அமைச்சரான பேராசிரியர் ஜி .எல்.பீரிஸின் லண்டன் வருகையை எதிர்த்து நேற்று லண்டனில் ஈழத்தமிழர்களால் ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டுள்ளது.லண்டனில் நேற்று (19-10-2010) செவ்வாய்க்கிழமை மதியம் 12:30 மணிமுதல் மாலை 3:30 மணிவரை ஜி.எல்.பீரிஸின் வருகைகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர் கலந்துகொள்ளும் மாநாட்டைக் கண்டித்தும் நூற்றுக்கணக்கான லண்டன் வாழ் தாமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள ரெம்பிள் (TEMPLE) பகுதியில் அமைந்துள்ள மாநாடு நடைபெறும் அருண்டேல் ஹவுஸ் (ARUNDEL HOUSE) மண்டபத்திற்கு வெளிப்புறமாக கூடிய நூற்றுக்கணக்கான தமிழர்கள், ஜி.எல்.பீரிசின் மாநாட்டை எதிர்த்து கோஷமிட்டனர்.
காலநிலை ஒத்துழைக்காது மழை பொழிந்தபோதும் அங்குகூடிய மக்களில் ஒருவர் கூட விலகாது அங்கேயே கூடிநின்று தமது எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.
அத்தோடு அவ்வழியாக சென்ற வேற்றின மக்களுக்கு துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டது. அதில் இலங்கை அரசின் போர்குற்றங்கள், மற்றும் இலங்கையில் தொடர்ந்தும் தமிழர்கள் அடக்கப்பட்டும், படுகொலை செய்யப்பட்டும் வருவதை குறிக்கும் விபரங்கள் அடங்கியிருந்தன.
பிரித்தானிய தமிழர் பேரவையால் குறுகியகால அவகாசத்தில் ஒழுங்குசெய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், வேலை நாளாக இருந்தும் கொட்டும் மழையிலும் கூட நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.





மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to பிரித்தானியாவில் பீரிஸின் வருகையை எதிர்த்து நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)