தொடர்ச்சியாக இப் பயணம் 11.10.2010 அன்று 1000 கிலோ மீற்றர் தூர மிதிவண்டிப் பயணமாக மாற்றம் பெற்று யேர்மன் வாழ் மூன்று இளையோர்களான தேவன், சின்னத்துரை, சஞ்சீவன் ஆகியோரினால் யேர்மன் தலைநகரை நோக்கி ஆரம்பிக்கப்பட்டது.
நேற்று 22.10.2010 அன்று அவர்களை வரவேற்கும் முகமாக பேர்லினில் எழுச்சி நிகழ்வு நடைபெற்றது.
இவ் எழுச்சி நிகழ்வில் யேர்மன் நாட்டின் இடதுசாரி கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும், துருக்கி நாட்டை சேர்ந்த சமாதான செயற்பாட்டாளரும் அத்தோடு புலம்பெயர் தமிழர்களை பற்றி ஆய்வு செய்யும் யேர்மன் நாட்டை சேர்ந்த பெண்மணி ஒருவரும் மிதிவண்டிப் பயணத்தை மேற்கொண்ட இளையோர்களை வரவேற்றார்கள்.
இவர்களோடு ஜெனிவாவிலிருந்து Brüssel வரை நடைப்பயணத்தை மேற்கொண்ட ஜெகன் அவர்களும் இவ் நிகழ்வில் கலந்துகொண்டார்.
மிதிவண்டிப் பயணத்தை மேற்கொண்ட இளையோர்கள் தமது பயணத்தைப் பற்றிய விபரத்தையும் அத்தோடு அவர்கள் மேற்கொண்ட சந்திப்புக்களில் பேசப்பட்ட கருத்துக்களை மக்களுக்கு யேர்மன் மற்றும் தமிழ் மொழியிலும் எடுத்துரைத்தனர்.
சிறப்பாக இடதுசாரிக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உரையாற்றுகையில்,
சிறிலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றத்தையும் அடுத்து சிறிலங்கா அரசு போர் முடிந்ததிலிருந்து இன்று வரை எந்தவொரு சமூக, கலாச்சார, அரசியல் ரீதியான வேலைத்திட்டங்களும் முன்வைக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காடினார்.
அத்துடன் போர்க்குற்றவாளியான இராணுவ தளபதியான ஜெகத் டயஸை யேர்மனிய அரசாங்கம் எந்தவொரு விசாரணையுமின்றி தூதுவராக ஏற்றுக்கொண்டதற்கு கண்டனம் தெரிவித்தார். இவ் விடயங்கள் பற்றி தாம் தம் கட்சி ரீதியாக யேர்மன் பாராளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பியதாகவும் கூறியிருந்தார்.
துருக்கி நாட்டைச் சேர்ந்த சமாதான நலன்விரும்பி உரையாற்றுகையில்,
தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டியது மிக அவசியம் என்றும் அத்தோடு தமிழர்கள் சோர்ந்து விடாமல் தமக்கு நீதிகிடைக்கும் வரை போராட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்.
யேர்மன் நாட்டை சேர்ந்த பல்கலைக்கழக மாணவி உரையாற்றுகையில்,
தான் முதலில் தமிழர்கள் பற்றி பெரிதாக அறிந்திருக்கவில்லை என்றும் தற்பொழுது தான் மேற்கொள்ளும் புலம்பெயர் தமிழர்களைப் பற்றிய ஆய்வு மூலமாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடைப்படையில் தான் மிகவும் ஆச்சரியப்பட்டதாகவும் அத்தோடு சிறப்பாக தமிழ் இளையோர்களின் செயற்பாடுகள் பற்றி பெருமைப்படுவதாகவும் தெரிவித்தார்.
இறுதியாக பேர்லின் வாழ் இளையோர்களால் சமாதானத்துக்கான பாடல்களும், கவிதைகளும் யேர்மன், ஆங்கில, தமிழ் மொழியில் வழங்கப்பட்டது.
மிதிவண்டிப் பயணத்தை மேற்கொண்ட இளையோர்களை பாராட்டும் முகமாக நாடு கடந்த அரசாங்கத்தின் யேர்மன் பிரதிநிதிகளின் வாழ்த்துரையும், யேர்மன் எழுத்தாளர் சங்கத்தின் வாழ்த்துரையும் இடம்பெற்றது.
'நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்' என்னும் எழுச்சி பாடலுடனும் இவ் மிதிவண்டிப் பயணத்தை மேற்கொண்ட இளையோர்களின் தளராத நம்பிக்கையுடனும் நிச்சயம் நாம் தமிழீழம் அடைவோம் என்ற உறுதியோடு இவ் எழுச்சி நிகழ்வு வெற்றிகரமாக நிறைவடைந்தது.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to பேர்லின் மாநகரில் நடைபெற்ற மிதிவண்டிப் பயணத்தின் எழுச்சி நிகழ்வு (படங்கள் இணைப்பு)