Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டுக்காக உயிரையும் கொடுப்பேன் சிறை வைத்து எனது பயணத்தை தடுக்க முடியாது என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தினால் 30 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் வெலிக்கடை சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் சரத் பொன்சேகா வெள்ளைக் கொடி விவகார வழக்கில் ஆஜர் படுத்தப்படுவதற்காக நேற்று மேல் நீதிமன்றத்திற்கு சிறைக்காவலர்களினால் அழைத்து வரப்பட்டார்.

நீதிமன்ற வாசலில் காத்திருந்த ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வெலிக்கடைச் சிறைச்சாலையிலிருந்து வான் ஒன்றில் இவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். இவர் அழைத்து வரப்பட்ட நேரத்தில் நீதிமன்றத்திற்கு முன்பாக ஒன்று கூடியிருந்த ஜனநாயக தேசியக் கூட்டணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டிருந்தனர். இவரது வானை வழிமறித்த அவர்கள் சரத் பொன்சேகாவை விடுவிக்குமாறு கோஷம் எழுப்பினர்.

இதனையடுத்து மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டு சரத் பொன்சேகா அழைத்து வரப்பட்ட வான் நீதிமன்றத்திற்குள் கொண்டு செல்லப்பட்டது.

நீதிமன்ற வாசலில் காத்திருந்த ஊடகவியலாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள், நண்பர்களுக்கு கையை அசைத்த சரத் பொன்சேகா நாட்டுக்காக உயிரையும் கொடுப்பேன்.

சிறை வைத்து எனது பயணத்தை தடுக்க முடியாது என தெரிவித்து விட்டு நீதிமன்றத்திற்குள் சென்றார்.

0 Responses to நாட்டுக்காக எனது உயிரையும் கொடுப்பேன்!: பொன்சேகா!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com