முல்லைத்தீவு முள்ளியவளையில் குடும்பப்பெண்ணும் தாயும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.ஸ்ரீலங்காப்படையினரின் போர் நடவடிக்கையின் போது இடம்பெயர்ந்து தற்போது மீள்குடியேறியுள்ள முல்லைத்தீவின் முள்ளியவளை பகுதியில் உள்ள மக்கள் தொழில்வாய்ப்பின்றி சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள்.
அண்மையில் முள்ளியவளை 3 ஆம் வட்டாரத்தை சேர்ந்த முத்தையா தமிழ்வேந்தன் என்பவர் கள்ளச்சாராயம் காச்சி விற்பனை செய்துவந்துள்ள நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக இளம் துணைவியையும் மாமியாரையும் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ள நிலையில் குறிப்பிட்ட நபரை ஸ்ரீலங்கா காவல்துறையினரும் ஸ்ரீலங்காப்படையினரும் இணைந்து சுற்றிவளைத்து கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முள்ளியவளைப்பகுதியில் தொழில்வாய்ப்பில்லாத குடும்பத் தலைவர்கள் ஸ்ரீலங்கா காவல்துறையினரின் உதவியுடன் கள்ளச்சாரயம் காச்சி விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to முள்ளியவளையில் குடும்பப்பெண்ணும் தாயும் வெட்டிப் படுகொலை