Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதியும் வன்னிப் படுகொலையின் முக்கிய காரண கர்த்தாக்களில் ஒருவருமான ஜெனரல் சரத் பொன்சேகாவை சிறைச்சாலையில் வைத்தே ஏனைய தமிழ் கைதிகள் மூலமாக படுகொலை செய்யும் திட்டம் அரங்கேறி வருவதாக நம்பகரமான தகவல்கள் கிடைத்துள்ளன.

சரத் பொன்சேகா இராணுவத்தை விட்டு விலகி இலங்கை அரசிற்கெதிராக அரசியலில் குதித்தபோதே இந்த படுகொலை திட்டம் வெவ்வேறு கோணங்களில் கோத்தபாய தலைமையில் ஆராயப்பட்டதாகவும், தற்போது அதற்கான காலம் கனிவடைந்துள்ளதாகவும் அரசிற்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து கொழும்பை தலைமையகமாக கொண்ட பத்திரிகை ஒன்றுக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் அந்த தகவலை வெளிவிட்டால் அந்த பத்திரிகையும் சீல் வைக்கப்படலாம் என்ற அச்சத்துடன் செய்திகள் பிரசுரிக்கப்பட்டு வருகின்றன.

அண்மையில் வெளிநாடு சென்று திரும்பிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே பொன்சேகா மன்னிப்பு கேட்டால் அதனை பரிசீலிப்பதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால் பொன்சேகா அதற்கு அடிபணிய மறுக்க மகிந்தவின் இத்திட்டம் மேலும் முடிவுக்கு வந்துவிட்டதாக அறியவருகின்றது.

விடுதலைப்புலிகளால் நடாத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் போது தப்பிய சரத் பொன்சேகா அதன்போது தான் உயிர் தப்பியிருப்பேன் என்று நம்பியிருக்கவில்லையாம். ஆனால் உயிர்தப்பி வெளிநாட்டுக்கு மருத்துவ சேவைக்காக சென்றபோது தமது நெருங்கியவர்களிடம், நான் உயிர் தப்புவேனோ தெரியாது, ஆனால் தப்பி வந்தால் தமிழர்களை சும்மா விடமாட்டேன் என்று கூறியிருந்தாராம்.

அதேபோல பொன்சேகா மீண்டும் சிறையிலிருந்து வெளியே வந்தால் ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கே உலைவைத்து விடுவார் என்ற காரணத்தினால் அவரை சிறையிலேயே வைத்து சமாதிகட்ட தீர்மானித்திருப்பதாகவும் அதனையும் தற்போது சரணடைந்துள்ள விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் மீது கொலைப்பழியை போடுவதற்கும் திட்டமிட்டுள்ளதாக அறியவருகின்றது.

தற்போதுள்ள சிறைச்சாலையில் பாதுகாப்பு போதாது ஒன்ற காரணத்தைகாட்டி அவர் விரைவில் விடுதலைப்புலி சந்தேக நபர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள வேறொரு சிறைச்சாலைக்கு மாற்றப்படவுள்ளதாகவும் அங்கு வைத்து திட்டமிட்டவாறு படுகொலைசெய்து விட்டு விடுதலைப்புலிகள் மீது மீண்டும் பழியை போட்டு தனது அரச கட்டிலை தக்கவைக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to பொன்சேகாவை சிறையில் வைத்தே விடுதலைப் புலிகளால் படுகொலை செய்ய அரசு திட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com