அரசதரப்பு சட்டத்தரணி சார்பில் ஆஜரான சட்டத்தரணி நளின் லடுவாஹெட்டி, நீதிபதிகள் தீபாலி விஜேசுந்தர, டபிள்யூ.எம்.பி.பி. வராவேவ எம்.இஸட். ரம்ஸீன் ஆகியோரிடம் இதை சுட்டிக்காட்டினார்.
இதேவேளை குறுக்கு விசாரணையின்போது தான் செய்தி ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் எதுவும் இல்லையெனவும், விவரண ஆசிரியராக முன்னர் பணியாற்றியதாகவும் பிரெட்ரிகா ஜேன்ஸ் ஒப்புக்கொண்டார் எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சண்டே லீடர் ஆசிரியரின் சாட்சியத்தை வலுவிழக்கச்செய்யும் நோக்குடன் அரச தரப்பு சட்டத்தரணிகளால் குறுக்குவழிகளில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அதன் ஒரு பகுதியாக சண்டே லீடர் ஆசிரியர் ஒரு நேர் காணலை நடத்துவதற்கான தகுதியில்லை என நிரூபிப்பதற்கான குறுக்குகேள்விகள் கேட்கப்பட்டதாகவும் அறியவருகின்றது.
இவ்விசாரணை நாளை புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. அத்துடன் நலன்விரும்பி ஒருவரால் சரத் பொன்சேகாவுக்காக வழங்கப்பட்ட தொலைக்காட்சியை பயன்படுத்த அனுமதிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to சண்டே லீடர் ஆசிரியரின் சாட்சியத்தை வலுவிழக்கச் செய்ய அரசுதரப்பு சதி!