அத்துடன், 18மாத பச்சிளம் பாலகன் மற்றும் 7 வயதுடைய இரண்டாம் வகுப்பு மாணவி ஆகியோர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
39ம் கொலனியிலுள்ள தனது வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருந்தபோதே இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் யானை நுழைந்து கண்டபடி தாக்கியுள்ளதாக தெரியவருகிறது.
மரணமானவர் 5 பிள்ளைகளின் தாயான 55 வயதுடைய சில்வா லீலாவதி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது பேரப்பிள்ளைகளான சிறிபால அனுசா (7 வயது), சிறிபால தவேந்திரன் (18 மாதம்) ஆகியோரே படுகாயமடைந்தவர்களாவர். என வெல்லாவெளி பிரதேச பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த குழந்தைகளின் பெற்றோர் மத்திய கிழக்கில் தொழில் புரிந்து வருகின்றனர். மரணமான பாட்டியின் வளர்ப்பிலேயே இக்குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெல்லாவெளி பொலிசார் ஸ்தலத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to வெல்லாவெளி கிராமத்தில் யானைகள் அட்டகாசம்! வயோதிப பெண் ஸ்தலத்தில் பலி!!