டென்மார்க் அரசிடம் நீதி கேட்டும் சிறிலங்கா அரசின் கோர முகத்தை டெனிஸ் மக்களுக்கு எடுத்துக்காட்டவும் மகேஸ்வரன் , பார்த்தீபன் மற்றும் மனோகரன் ஆகிய டென்மார்க் வாழ் ஈழத்தமிழர்களால் கேர்ணிங் நகரில் இருந்து டென்மார்க்கின் தலைநகர் நோக்கி ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய நடைப்பயணம் இன்று 7வது நாள் மாலை Ringsted நகரை சென்றடைந்தது.
நாளை மூவரும் Ringsted நகரில் இருந்து தமது மனிதநேய நடைப்பயணத்தின் 8வது நாளை ஆரமபிக்கவுள்ளனர்.
முக்கிய குறிப்பு:
வரும் சனிக்கிழமை டென்மார்க்கின் தலைநகரை சென்றடையும் மகேஸவரன், பார்த்தீபன் மற்றும் மனோகரனை வரவேற்று அங்கே நடைபெற இருக்கும் எழுச்சி ஒன்றுகூடலில் அதிகப்படியான டென்மார்க் வாழ் தமிழீழ மக்களை கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
அனைத்து நகரங்களிலும் போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்படுவதாகவும் உங்கள் நகரங்களில் உள்ள தமிழ் அமைப்புகளை அல்லது டென்மார்க் தமிழர் பேரவையின் உங்க நகர தொடர்பாளரை தொடர்பு கொண்டு விபரங்களை பெற்றுக்கொள்ளுமாறும் டென்மார்க் தமிழர் பேரவையின் மானிடவிவகாரகுழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நடைப்பயணத்தில் ஈடுபடுவோருடன் தொடர்புகொள்ள தொலைபேசி: (0045)52173671
அல்லது
skype: dtfdenmark.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to வாரம் ஒன்றை பூர்த்தியாக்கும் டென்மார்க் மனிதநேய நடைப்பயணம்