Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பொன்சேகாவை சிறை வைத்ததன் மூலமாக அரசாங்கம் மக்கள் சாபத்திற்கு உள்ளாகியுள்ளது. விடுதலைப்புலிகளும் சிரிக்கின்றனர் என்று .தே.. எம்.பி. யான காமினி ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற மாகாண சபையின் திருத்த சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:

இராணுவ நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்ட வரலாறுகள் இருக்கின்றன. அடுத்த விவாதத்தின் போது அந்த தரவுகளை முன் வைப்பேன். ஜெனரல் கொப்பேகடுவ, ஜானக பெரேரா மற்றும் சரத் பொன்சேகா முக்கியமானவர்கள்.

ஜானக பெரேரா கொலை செய்யப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் பிழையான தகவல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

நாம் ஆட்சிப்பீடம் ஏறியதன் பின்னர் ஆணைக்குழுவை நிறுவி கொலை தொடர்பில் உண்மைத் தன்மையை வெளிக்கொண்டு வருவோம்.

சரத் பொன்சேகாவை சிறையில் அடைத்து மக்கள் சாபத்திற்கு உள்ளாக வேண்டாம்.

பாதுகாப்பு டிபென்டர் வாகனம் ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இராணுவத்தினர் தப்பித்து கொண்டனர்.

மக்களின் சாபத்திற்கு இலக்காக வேண்டாம்.

கே.பி. மாஸ்டர்கள் எங்கே?

அரசாங்கத்திற்கு ஞானம் குறைந்துவிட்டது.

மக்கள் சாபம் இடுகின்றனர். புலிகள் சிரிக்கின்றார்கள் என்றார்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to பொன்சேகாவை சிறை வைத்ததன் மூலமாக விடுதலைப்புலிகள் சிரிக்கின்றனர்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com