Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பொன்சேகாவின் பாராளுமன்றப் பதவி ரத்தாகி விட்டது குறித்த அறிவிப்பு சற்று முன்பு வெளிவந்துள்ளது. தேர்தல் ஆணையாளர் விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்புரிமை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அதற்குப் பதிலாக விருப்பு வாக்கின் அடிப்படையில் அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் சுனில் ஹந்துன்னெத்தியின் பெயர் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், தமது நாடாளுமன்ற உறுப்புறுரிமை நீக்கப்பட்டமைக்கு எதிராக ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடைக்கால தடையாணை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

தாம் நாடாளுமன்றத்திற்கு சென்று வாக்களிக்கவும், தமது சிறப்புரிமையையும், பாதிப்பின்மையையும் உறுதிப்படுத்தி தமக்கு இந்த அனுமதியை வழங்கவேண்டும் என அவர் தமது மனுவில் கோரியுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் பி திஸாநாயக்க, நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு குற்றவாளியாக இனங்காணப்பட்டார்;.

எனினும், அவரின் நாடாளுமன்ற உறுப்புரிமையை நீக்குவதாக, நாடாளுமன்ற செயலாளர் தேர்தல் செயலாளருக்கு அறிவிக்கவிலை என்ற காரணத்தையும், சரத் பொன்சேகா தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை தமக்கு எதிரான முதலாவது இராணுவ நீதிமன்ற தீர்;ப்புக்கு எதிராக சரத் பொன்சேகா தாக்கல் செய்த வழக்கு இன்று மூன்று நீதியரசர்கள் ஒருவர் வெளிநாடு சென்றதன் காரணமாக ஒக்டோர் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனை தவிர அனோமா பொன்சேகா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவின் விசாரணையும், ஒக்டோபர் 25 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

0 Responses to சரத் பொன்சேகாவின் பாராளுமன்றப் பதவி ரத்து

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com