இலங்கையில் அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது நிகழ்ந்த விடயங்கள் பற்றி அறிந்து கொள்வது அவசியம் என்று குறிப்பிடும் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், அது தொடர்பான சுயாதீன ஆணைக்குழுவொன்றின் அவசியம் குறித்து வலியுறுத்தியுள்ளார்.இன்று (27.10.2010) பிரித்தானியப் பாராளுமன்றத்தில் தொழிற் கட்சியின் பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கேள்வியொன்றுக்குப் பதிலளித்து உரையாற்றும் போதே பிரித்தானியப் பிரதமர் அவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்ற மீறல்கள் குறித்தே பிரஸ்தாப பெண் பாராளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இலங்கையில் என்ன நடைபெற்றது என்பதைக் கண்டறிவது அவசியமானது என்றும், அதற்கான ஆணைக்குழுவொன்று தேவை என்பதே எமது நிலைப்பாடு என்றும் பிரித்தானியப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.



0 Responses to இலங்கையின் இறுதி போர் பற்றிய தகவல்களை அறிய சுயாதீனமான ஆணைக்குழு தேவை: டேவிட் கமரூன்